Friday 17 March 2017

குழந்தைகளின் மனக்கலக்கத்தை கையாள ... -12

67. “உன் அபிமான __ பத்தி சொல்லேன்."
இப்படீஈஈ போக்குக்காட்டத்தான். சில சமயம் பிரச்சினைலேந்து கவனத்தை திருப்பறதே சரியா இருக்கும். எந்த குழந்தைக்குத்தான் அபிமான பொம்மை, கதை, நண்பன், காமிக் ஹீரோ இல்லை?

68. “உன்னால முடிஞ்ச வரைக்கும் நல்லா செய்; போதும்.”
எப்பவுமே எல்லாருக்குமே ஒரு நல்ல முயற்சி செய்யறத்தான் குறிக்கோளா இருக்கணும். ரிசல்ட் நம்மகிட்ட இல்லே. அதுதானே கீதையில சொன்னது. அதனால பர்ஃபெக்டா இப்படித்தான் பண்ணணும் என்கிற கான்செப்டை தூக்கி எறிங்க!

69. “இது என்னன்னு நீ நினைக்கிறே?"
சைக்காலஜில காக்னிடிவ் தெரபி சொல்லறது உணர்ச்சிகள் நடப்புகளால ஏற்படுவதில்லை. அவற்றை நாம எப்படி மனசில உள்வாங்கிக்கறோம் என்பதுதான் விஷயம். தப்பா உள்வாங்கிக்காம இருந்தாலே பல பிரச்சினைகள் தீர்ந்துடும்!

70. “கடின முயற்சி திறமையை வெல்லக்கூடும்."
கச்சிதமா செய்யறவங்க எப்பவும் தன்னை மத்தவங்களோட ஒப்பிட்டுக்கொண்டே இருக்காங்க. இவள் என்னை விட அழகு; இவன் என்னைவிட வலிமையானவன். குழந்தை இந்த ரீதியில் யோசிச்சு நான் போட்டி போட மாட்டேன்; இவங்க எல்லாரும் என்னைவிட திறமைசாலிங்கன்னு சொல்லக்கூடும். திறமை என்கிறது ஒரு பக்கம் இருக்கட்டும்; கடின உழைப்புக்கு மாற்றே கிடையாதுன்னு சொல்லுங்க!

71. “நீ எப்படி இருக்கியோ அப்படியே உன்னை எனக்குப்பிடிக்கும்."
அப்பப்ப இப்படி ஒரு உறுதிப்படுத்தல் வேண்டி இருக்கலாம். அம்மா. அப்பா எதிர்பார்ப்புக்கு நான் வரலையே. என்னை அவங்களுக்கு பிடிக்குமோ என்கிற மனப்பான்மை போகணும்.

72. “எப்பவுமே இப்படி இருக்க மாட்டே!"
இப்ப மனக்கலக்கம் இருக்குதான். இப்படியே வாழ்நாள் முழுக்க இருப்போமா என்ன? மனக்கலக்கம் அப்பப்ப வரும் போகும். என்னைக்கோ ஒரு நாள் காணாமலும் போகும். இதை உறுதியா சொல்லணும்.


நிறைந்தது!

Thursday 16 March 2017

குழந்தைகளின் மனக்கலக்கத்தை கையாள ... - 11

60. “உன் கவலை எவ்வளோ பெரிசு? அதை கொஞ்சம் சின்னதாக்க முடியுமான்னு பார்க்கலாம்."
மனக்கலக்கத்தை அளவிடறது நல்லது. எறும்பு சைஸ்ன்னா அதை பிடிச்சு ஒரு தீப்பெட்டில போட்டுடலாம். மரம் அளவுன்னா அதை கோடாலியால வெட்டிடலாம். இப்படி குழந்தையின் கற்பனையை பயன்படுத்தி மனக்கலக்கத்தை குறைக்கலாம்.

61. “வா, யாருக்கானா உதவி செய்ய போகலாம்."
மனக்கலக்கம் ஒத்தரை அவரைப்பத்தியே மட்டும் நினைக்க வைக்குது. எனக்கு இப்படி ஆகுமோ அப்படி ஆகுமோ, நான் கஷ்டப்படறேன்.... மத்தவங்களுக்கும் கஷ்டம் இருக்குன்னு தெரியறப்போ ‘ ஓ நமக்கு மட்டுமில்லைன்னு தோணும். அதே சமயம் கவனமும் திசை மாறும். அவங்களால மத்தவங்க கஷ்டத்தில உதவ முடியறப்ப கொஞ்சம் நிறைவும் ஏற்படும்.

62. “நமக்கு கொஞ்சம் இயற்கை டானிக் வேணும்!"
இயற்கை சூழல்ல உலாவ போறதோ அல்லது வெறுமே இதமான சூரிய வெளிச்சத்தில படுத்து கொண்டு தோல் வைட்டமின் டி ஐ உற்பத்தி செய்யும்போது வானத்தில மிதக்கிற கழுகளை வேடிக்கை பார்க்கிறதோ.... சுவையான அனுபவம். இந்த சூழல்ல மனக்கலக்கத்தோட இருக்கறது கஷ்டம்!

63. “அத கொஞ்சம் சின்ன சின்ன துண்டா வெட்டலாம்!"
ஹோம் வெர்க்கை பாத்தா மலைப்பா இருக்குதான்! எப்படி முடிக்கப்போறோம்ன்னு ஒரே கலக்கம். அதை சுலபமா முடிக்கக்கூடிய சின்ன பகுதி பகுதியா வெட்டுங்க. சைய்ன்ஸ், தமிழ் பாடம் மட்டும் இப்ப செய். விளையாடிட்டு வந்து கணக்கு போட்டுக்கலாம் என்கிற ரீதியில் அதை வெட்டிக்கொடுத்தா செஞ்சுடுவாங்க!

64. “செய்ய ஆரம்பி; பிடிக்கலைன்னா விட்டுடலாம்.’"
பல குழந்தைகளோட மனக்கலக்கத்தின் காரணத்தை கண்டு பிடிக்க இயலாது. புது விஷயங்களை செய்யத்தயங்குவாங்க. சாப்பாட்டு நேரத்தில உணவு ஏதாவது பிடிக்கலைன்னா அதை ருசி பார்க்காம அப்படி சொல்லக்கூடாதுன்னு சில வீடுகளில ஒரு விதி! கொஞ்சமா சாப்டு பாத்து பிடிக்கலைன்னா அது ரைட்ன்னு ஏற்றுக்கொள்ளப்படும்!
இதோட உபயோகம் என்னன்னா புதுசா எதையாவது செய்ய தயங்கற குழந்தைகிட்டே சாப்பாட்டில புது ஐடம் மாதிரித்தான் இதுவும். செய்ய ஆரம்பி; பிடிக்கலைன்னா விட்டுடலாம்ன்னு சொல்ல முடியும்.

65. “உன் அத்தைபாட்டி பத்தி உன்கிட்டே சொன்னேனோ?"
குழந்தைகளோட ‘உணர்வு நலன்’ க்கும் அவங்க தன் குடும்பம் பத்தி கதைகள் தெரிஞ்சு வெச்சிருக்கறதுக்கும் நிறைய தொடர்பு இருக்கு. தான் தனி இல்லை, ஒரு குடும்பத்துடைய அங்கம்ன்னு இது அவங்களுக்கு நிறைய தைரியத்தை கொடுக்கும்.
.
66. “இப்ப உனக்கு வேற ஏதாவது பிரச்சினை இருக்கா?"

தூக்கக்கலக்கம், பசி, தாகம் ... இப்படி சிலது இருக்கும்போது மனக்கலக்கம் உள்ளே வந்துடும். இதை எல்லாம் சரி செஞ்சாலே கலக்கம் அடங்கிவிட வாய்ப்பிருக்கு.

Wednesday 15 March 2017

குழந்தைகளின் மனக்கலக்கத்தை கையாள ... - 10


55. “ஆறை தாண்டி போகணும்ன்னா சில சமயம் அதில இறங்கி அமிழ்ந்து நடந்து போகறதுதான் வழி."
வளர்ந்த குழந்தைகளுக்கு அப்பப்ப ஆறுதல் படுத்தியாகணும். முதல்ல இந்த பிரச்சினை எப்படியும் முடிவுக்கு வந்துடும். கடைசியில காத்திருக்கறது மன உறுதி.

56. “இப்போதைக்கு இன்னும் ஒரே ஒரு ஸ்டெப் எடு!."
நீச்சல் கத்துக்க குளத்தில தள்ளிவிடறாப்போல சில சமயம், குறிப்பா புதுசா எதையாவது முயற்சி செய்யற குழந்தைக்கு கொஞ்சம் முன்னால தள்ளிவிடணும். உதாரணமா ஏணில ஏற தயங்கற குழந்தைக்கு பக்கத்தில பாதுகாப்பா நிக்கறது மட்டும் இல்லாம இன்னும் ஒரே ஒரு படி ஏறு பார்க்கலாம்ன்னு உற்சாகப்படுத்தணும். ஏறினபிறகு ஏதாவது பேசிவிட்டு இன்னும் ஒரே ஒரு... புரியுதில்லையா?

57. “ஒரு திகில் கதை சொல்லேன்!"
மனக்கலக்கத்தின் சில வெளிப்பாடுகள் சில ஹார்மோன்கள் சுரக்கறதால வரும். ஆனா இது அதிக நேரம் நிலைக்காது. திகில் கதை இதே ஹார்மோன்களை சுரக்க வைக்கும். அதனால அதிக நேரம் மனக்கலக்கம் நிலைக்காது! கதை கட்டறதுல கொஞ்சம் கற்பனை திறனும் வளரும்!

58. “இந்த மாதிரி நேரத்தில ___ என்ன செய்வார்?"

குழந்தைகளுக்கு ஒரு சூப்பர் ஹீரோ இருப்பாரே! அவர் யாருன்னு உங்களூக்கு தெரியும் இல்லை? ஹனுமார், பீமன், சோட்டா பீம் ... கற்பனை ஹீரோவை விட நிஜ வாழ்க்கை ஹீரோ இருந்தா இன்னும் நல்லது. குறிப்பிட்ட நெருக்கடில அவங்க என்ன செய்வாங்க? இதை நினைச்சுப்பாத்தா குழந்தைக்கு தானும் அப்படி செய்யத்தோணும். அது இப்ப பொருத்தமா இருக்கலாம்!

59. “நீ இப்ப எப்படி உணர்கிறேன்னு எனக்குத்தெரியும்.."
நிறைய நேரம் குழந்தைகளோட மனக்கலக்கத்தை ‘ஆமாம், அது இருக்கு’ ன்னு ஒத்துக்கொண்டாலேகூட போதும். யார்தான் அதுக்கு ஆளாகலை? அத்தோட காரணம் வேணும்ன்னா நமக்கு ‘சில்லி’ன்னு தோணலாம். ஆனா அது இருக்கு என்கிறது நிஜம்.

60. “உன் கவலை எவ்வளோ பெரிசு? அதை கொஞ்சம் சின்னதாக்க முடியுமான்னு பார்க்கலாம்."

மனக்கலக்கத்தை அளவிடறது நல்லது. எறும்பு சைஸ்ன்னா அதை பிடிச்சு ஒரு தீப்பெட்டில போட்டுடலாம். மரம் அளவுன்னா அதை கோடாலியால வெட்டிடலாம். இப்படி குழந்தையின் கற்பனையை பயன்படுத்தி மனக்கலக்கத்தை குறைக்கலாம்.

Tuesday 14 March 2017

குழந்தைகளின் மனக்கலக்கத்தை கையாள ... - 9

49. “புதுசா ஒரு கதை எழுதலாமா?”

இப்போதைய நிலமை எப்படி நடந்து எப்படி முடியும்ன்னு குழந்தை மனசில ஏற்கெனவே ஒரு கதை எழுதியாச்சு. அதே கதை ஏன் இருக்கணும்? கதை வேற விதமாக்கூட இருக்கலாமே? குழந்தை சொல்லற கதையை ஒத்துப்போம். அதுக்கப்பறம் வேற எப்படி எப்படியெல்லாம் இருக்கலாம்ன்னு கற்பனை செய்யச்சொல்லுவோம்; குறிப்பா வேற மாதிரி முடிவோட.

50. “ நான் அதைப்பத்தி கவலைப்படறேன்/ யோசிக்கிறேன். அதனால நீ கவலைப்பட தேவையில்லை.”
குழந்தைகளுக்கு அவங்களோட பிரச்சினை அவங்களுக்கு ரொம்ப முக்கியம்; ரொம்ப பெரிசு! அவங்களால கையாள முடியாதது. அதனால அதைப்பத்தி அவங்க மலைப்போட கவலைப்படறாங்க. புயல் அடிக்குதுன்னு வெச்சுப்போம். அவங்க அதைப்பத்தி என்ன செய்ய முடியும்? இந்த மாதிரி சமயத்தில நீ கவலைப்படாதேப்பா; வேற யாரோ எக்ஸ்பெர்ட் பாத்துக்கறாங்கன்னு சொன்னா அது அவங்களுக்கு ஆறுதலைத்தரும்.

51. “முன்னே அதை பத்தி கொஞ்சம் ஆராய்ச்சி செய்யலாம்” ன்னு சொன்னது போல அறிவியலை ரொம்ப நம்பற குழந்தைகிட்ட இது பத்தி அறிவியல் என்ன சொல்லுதுன்னு கேட்டா அது பத்தி யோசிக்கறப்ப மனசு புத்தி என்கிற ரூபத்தில வேலை செய்ய ஆரம்பிக்க மனக்கலக்கம் குறையும். முக்காவாசி கார் விபத்துகள்ல தப்பிச்சுக்க சீட்பெல்ட் போட்டுக்கறதுதான் நல்ல வழின்னு தெரிஞ்ச குழந்தை கார்ல ஏறி சீட் பெல்ட் போட்டுக்கொண்டதும் ரிலாக்ஸ் ஆகிடும்.

52. “பந்தை வீசி பிடிச்சு விளையாடலாமா?”
சாதாரணமா மூளை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில குறிப்பிட்ட அளவு மட்டுமே வேலை செய்ய முடியும். அதனால அதுக்கு இப்படி திருப்பி திருப்பி நடக்கற வேலையை - பந்தை வீசி எறிஞ்சு அதை பிடிக்கறது- கொடுத்தா அதுக்கு மனக்கலக்கத்துக்கு நேரம் கொடுக்க முடியாது! அது என்ன வேலை என்கிறது அவ்வளவு முக்கியமில்லை. பந்தை பிடிக்க அது மேல மட்டுமே கவனம் வைக்கணும், இல்லையா? அப்ப உலகமே காணாமப்போகும். இதுதான் வேண்டியது.

53. “இத நா சொல்லச்சொல்ல சொல்லு."
ரிதம்.... மனசையும் உடலையும் தளர்த்தத்துக்கும் ரிததுக்கும் நிறையவே சம்பந்தம் உண்டு. அதனாலத்தான் நிறைய த்யான இசைல எல்லா ரிதமிக்கா கேட்கிற படி மழை சத்தமோ கடல் சத்தமோ கேட்கும்.
குழந்தையுடன் வெறும் கைதட்டலில் ஆரம்பிக்கலாம். கொஞ்சம் கொஞ்சமா அதை காம்ப்லெக்ஸ் ஆ ஆக்கலாம். யார் முதல்ல தப்பா தட்டறாங்களோ அவங்க அவ்ட்! ரெண்டு பேரும் சிரிச்சுட்டு திருப்பிடும் ஆரம்பிக்கலாம். இது குழந்தைக்கு போட்டி போட கத்துக்கொடுக்கறதோட மன அழுத்தத்தை நீக்கி நரம்பு மண்டலத்தை மனக்குவிப்பில கொண்டு வரும்.

54. “உன்னோட அபிமான பாட்டு எது?"

முதல்ல அபிமான பாட்டை போட்டுக்கேட்டுட்டு அப்புறம் கூட சேர்ந்து பாடி, அடுத்து கூடவே டான்ஸ் ஆடி.... கேளிக்கை நேரம். மன அழுத்தம் எங்கேப்பா

Monday 13 March 2017

குழந்தைகளின் மனக்கலக்கத்தை கையாள ... - 8

43. “உன்னோட ஜாலி கோட்டைக்கு போலாமா?”

மனக்கலக்கத்தை வெகுவாக குறைக்கக்கூடியது கற்பனை. அமைதியா இருக்கும் போது கண்களை மூடி அவங்களுக்குன்னு ஒரு இடத்தை தயார் செய்துக்கச்சொல்லணும். அது ஒரு ரூமோ, கோட்டையோ, தோட்டமோ, பூங்காவோ எப்படி வேணுமானாலும் இருக்கட்டும். அங்கே அவங்களுக்கு பிடிச்ச பொருள் எல்லாம் இருக்கும். அங்கே எப்ப போனாலும் சந்தோஷம்தான்! இப்படி ஒரு கற்பனையை அடிக்கடி செய்யசொல்லி பின்னால மனக்கலக்கம் வரும்போது இந்த இடத்துக்கு போகச்சொல்லலாம். இப்படி போக முடியும் வரை அமைதியான நேரத்தில இந்த பயிற்சி தேவை.

44. “நான் உனக்கு என்ன செய்யட்டும்?”

மனக்கலக்கத்தில இருக்கற குழந்தைகிட்ட அவக்களுக்கு என்ன வேணும்ன்னு கேளுங்க. கொஞ்சம் தனிமை, ஒரு கட்டுப்பிடி வைத்தியம் அல்லது ஒரு முழு தீர்வுன்னு தேவை மாறுபடும்.

45. “உன்னோட உணர்ச்சிக்கு ஒரு கலர் அடிச்சா அது என்னவா இருக்கும்?”

மனக்கலக்கத்தில இருக்கிறவங்களை அவங்களோட உணர்ச்சியை விளக்கச்சொன்னா அனேகமா முடியாது. ஆனா குழந்தைகளை இப்படி கேட்டா அவங்க யோசிப்பாங்க. கலரை கற்பனை செய்யறது சுலபம்தானே? இப்படி செய்யறது கலக்கத்தை தணிக்கும். அவங்க ஒரு நிறத்தை சொன்னா அட, ஏன் அப்படி நினைக்கறேன்னு கேட்கலாம்!

46. “நா உன்னை கட்டிப்பிடிச்சுக்கறேன்.”

காலங்காலமா பயன்படற டெக்னிக்! கலக்கத்தில இருக்கற குழந்தைய கட்டிப்பிடிச்சுக்கறது, மடில உக்காத்தி வெச்சுக்கறது... பெற்றோரோட உடல் சம்பந்தம் வருவது அவங்களுக்கு ஆறுதலை கொடுக்கும். பாதுகாப்பா உணருவாங்க.

47. “முன்னே XYZ நடந்தப்ப நீ அதை தாண்டி ஜெயிக்கலை?”

முன்னே அனுபவிச்ச ஒரு வெற்றியை நினைவூட்டறது இப்போதைய முயற்சில முனைப்போட செயல்பட உதவி செய்யும்.

48. “இந்த சுவத்த கொஞ்சம் நகர்த்தி வைக்கலாமா, உதவி செய்யறியா?”

சுவத்தை தள்ளறது போல சில கடுமையான முயற்சிகள் இறுக்கத்தையும் மன உளைச்சலையும் குறைக்கும்.

Wednesday 8 March 2017

குழந்தைகளின் மனக்கலக்கத்தை கையாள ... - 7

37. “உன் வாசனை நன்பன் எங்கே?”

சில வாசனைகள் மனசை இதமா வருடி தளர்த்திக்கொடுக்கும். அந்த வாசனை இருக்கற ஏதாவது ஒரு பொருள் - ம்ம்ம் மைசூர் சாண்டல் ஸோப்?- கைவசம் இருக்கட்டும். மன இறுக்கம் அதிகமாகும் போது உதவும். சந்தனம் மாதிரியே ஜாதி பத்ரி, மல்லிகை, லாவண்டர். Chamomile. கமமைல் டீ மனக்கலக்கத்தை குறைக்க பிரசித்தி பெற்றது!

38. “அதப்பத்தி சொல்லேன்.”

குழந்தையை இடைமறிச்சு பேசாம முழுக்க தன்னை தொந்திரவு செய்யறது என்னன்னு சொல்லட்டும். அது அவங்களுக்கே ஒரு தெளிவை கொடுக்கும். அப்படி சொல்லும் போது அவங்களுக்கே என்ன செய்யணும் தோணினாலும் ஆச்சரியப்படறதுக்கு இல்லே.

39. “நீ அவ்வளோ தைரியசாலி!”

குழந்தை அந்த நிலைமையை சமாளிக்க முடியும்ன்னு ஒரு தைரியம் வர இப்படி சொல்லுவோம்.

40. “மனசு சாந்தியாக எந்த உத்தியை இப்ப கையாளபோறே?”

ஒவ்வொரு மனக்கலக்கம் தரும் பதட்ட நிலையும் வித்தியாசமானது. அதனால தகுந்த உத்தின்னு குழந்தைக்கு தோணுவதை தேர்ந்தெடுக்கட்டும். ஒரு வேளை அப்படி முடியலைன்னா நாம் செய்வோம்.

41. “நாம் ரெண்டு பேரும் சேந்து இதை சமாளிப்போம்.”

அச்சுறுத்தும் நிலைமை முடியும் வரை நாம கூடவே உறுதுணையா இருந்தா அது அவங்களை திடப்படுத்தும்.

42. “அந்த பயமுறுத்தற விஷயம் பத்தி வேற என்ன உனக்குத்தெரியும்?”

ஒரு விஷயம் அவங்களை அடிக்கடி அச்சுறுத்துமானா, அவங்க அமைதியா இருக்கும்போது அதைப்பத்தி கொஞ்சம் கூட்டு ஆராய்ச்சி செய்யலாம். அதைப்பத்தி பல விஷயங்களை கத்துக்கலாம். அதைப்பத்திய மனக்கலக்கம் வரும்போது இதை நினைவூட்டினால் அவங்க இன்னும் கொஞ்சம் திடமாவாங்க.
உதாரணமா கம்பளிப்பூச்சி பத்தி பயம்ன்னா அதைப்பத்தி படிச்சு அதுவேதான் வண்ணத்துப்பூச்சி ஆகிறதுன்னு புரிஞ்சப்பறம் அதை நினைவூட்டினா பயம்போய்விடலாம்.

Tuesday 7 March 2017

குழந்தைகளின் மனக்கலக்கத்தை கையாள ... - 6

30. “உன் எண்ணங்கள் ஒவ்வொண்ணா விலகிப்போறதை பார்க்கலாமா?”

கலக்கமான எண்ணங்கள் ஒரு ரயில்வே ட்ரெய்ன் மாதிரி. அனேகமா எல்லா குழந்தைகளும் ட்ரெய்ன் வரதையும் நிக்கிறதையும் அப்புறம் கொஞ்ச நேரத்தில கிளம்பறதையும் பாத்திருப்பாங்க. கலக்கமான எண்ணங்களை ட்ரெய்னா உருவகிச்சா அதை கொஞ்சம் நேரத்தில கிளம்பிப்போக வைக்க முடியும்! கொஞ்சம் ‘கூ ஜிக்புக்’ சத்தம் உதவி பண்ணும்.
31. “பார், நா பெரிய மூச்சு எடுக்கப்போறேன்.”

சொல்லறதைவிட செஞ்சு காட்டறது எப்பவும் நல்லது. ஆழ்ந்த மூச்சு எடுத்துவிடறது எப்பவுமே மனசை லேசாக்கும். செஞ்சு காட்டி குழந்தைகளும் அதே போல செய்யத்தூண்டறது நல்லது. சின்னக்குழந்தையா இருந்தா அவங்களை தூக்கி மார்போட அணைச்சுக்கொண்டே இதை செய்யலாம். மார்பு சுருங்கி விரியற ‘ரிதம்’ சுலபமா புரியும்.

32. “உனக்கு நான் எப்படி உதவலாம்?”

ரிலாக்சேஷன் பயிற்சி பெற்ற குழந்தைகளுக்கு நாமா ஏதையாவது செய்யச்சொல்லாம அவங்களையே தேர்ந்தெடுக்கச்சொல்லலாம். உள்ளுணர்வு சரியாவே வழி காட்டும்.

33. “இந்த உணர்ச்சியும் நகந்துடும்..”

சில சமயம் குழந்தைகள் மனக்கலக்கம் முடியவே முடியாதோன்னு நினைப்பாங்க. அதை மொழுகி மூடாம, அதை தவிர்க்கவோ, மனக்கலக்கத்தை அழுத்தவோ செய்யாம இது எப்படியும் முடிஞ்சுடும்; கொஞ்சம் பொறுத்திருன்னு சொல்லலாம்.

34. “மன அழுத்தப்பந்தை நாம் ரெண்டு பேரும் அழுத்தலாம்.”

ஸ்க்வீசி பொம்மைகள் தெரிஞ்சிருக்கும். அதே போல அழுத்தக்கூடிய பந்துகள் இருக்கு. சாதாரண பந்துகள் கடினமா இருக்கும். ரொம்ப அழுத்தினா உடைஞ்சு போகும். ஆனா இதுகளை எவ்ளோ வேணா அழுத்தலாம். அது மேலே ஸ்மைலி மாதிரி படங்களும் இருக்கலாம். இதை அழுத்த மனசில இருக்கிற அழுத்தத்துக்கு ஒரு வடிகால் கிடைக்கும்.

35. “உன் பொம்மை ..... க்கு ஏதோ கவலை போல இருக்கே? நாம போய் அதுக்கு ஏதாவது டிப் கொடுக்கலாமா?”

கவலைக்கு ஒரு பொம்மை இருக்கட்டும். குழந்தைக்கு கவலை இருக்கறது தெரிஞ்சா அதுக்கும் கவலை வந்துடும்! குழந்தையும் அப்பா/ அம்மா வும் போய் அதுக்கு ஆலோசனை சொல்லலாம்! குழந்தை தான் பெற்ற பயிற்சிகளை சொல்லும்போது தானும் செய்யத்தோணும்!

36. “இது ரொம்ப கஷ்டம்ன்னு எனக்குத்தெரியும்.”

கொஞ்சம் கடினமான விஷயங்களை ‘அதெல்லாம் ஒண்ணும் கஷ்டமில்ல’ன்னு மொழுகறதை விட ’கஷ்டம்தான்; இருந்தாலும் முயற்சி பண்ணா செஞ்சுடலாம்’ன்னு சொல்லறது நல்லது. அவங்களை நீங்க புரிஞ்சுண்டது அவங்களுக்கு புரியும்.