Thursday 22 October 2015

சூரிய குளியல் -1

ஓ ஹலோ, எப்படி இருக்கீங்க எல்லாரும்?
என்ன? உடம்பு எல்லாம் வலிக்குதா? சோர்வா இருக்கா? கழுத்து வலி, இடுப்பு வலி… 

(ஆமாய்ய்யா, ஆமா) சரி சரி விடுங்க. வயசானா அப்படித்தானிருக்கும்!

இப்படி பல பேருக்கு சில பல உபாதைகள் இருக்கும். எலும்புகள் வலுவிழந்து முறிவு ஏற்படலாம். எல்லாம் வயசானதால வருது, என்ன செய்யறதுன்னு நினைக்கலாம். வயசானதாலேயும் இருக்கலாம்; அப்படி இல்லாமலும் இருக்கலாம்!

அப்படி இல்லாம? ஆமாம். சமீப காலமாக இன்னொரு விஷயம் மருத்துவ உலகத்தில கவனத்துக்கு வந்துகிட்டு இருக்கு.

வைட்டமின் டி.

வைட்டமின் டி ஆ? அதுக்கென்ன?

அதோட குறைபாடால பலருக்கு இப்படி தெளிவில்லாத சில பல பிரச்சினைகள் வந்துகிட்டு இருக்கு! எலும்போட ஆரோக்கியம் தவிர்த்து மேலும் உடலோட எதிர்ப்பு சக்தி, சர்க்கரை வியாதி, இதயம்- நாளம் சம்பந்தமான நோய்கள், கான்சர் ந்னு பலதுக்கும் இதுக்கும் தொடர்பு இருக்கலாம்ன்னு கண்டு பிடிச்சு கொண்டு இருக்காங்க.

வைட்டமின் டி குறைபாடா? அதெப்படி? சூரிய ஒளி நம்ம உடம்புல படறப்ப நம்ம உடம்பே அதை தயாரிக்குதுன்னு படிச்சது நினைவுல இருக்கே?

சரியா சொன்னீங்க! தோலில சூரிய ஒளி படும்போது தோல் செல்களில் இது தயாரிக்கப்பட்டு ஈரல்லேயும் சிறுநீரகத்திலேயும் செயலூக்கம் பெறுது.

பின்னே என்ன பிரச்சினை?

சூரிய ஒளி தோல்ல பட்டாத்தானே? அதுக்கு நாம விடறோமா? நம்ம வாழ்க்கை முறை ரொம்பவே மாறிப்போச்சு. வெய்யில் ஏறும் முன்னேயே வீட்டை விட்டு கிளம்பி ஆபீஸ் போய், மாலை இருட்டும் போது வீடு திரும்பறவங்க பலர். ஏசி ரூமிலேந்து ஏசி பஸ் ஏறி ஏசி ஆபீஸுக்குப்போய் வேலை செஞ்சு ஏசி பஸ்ல வீட்டில இருக்கிற ஏசி ரூமுக்கு திரும்பற சிலரைவிட இவங்க பரவாயில்லைன்னாலும் தேவையான அளவு வெய்யில் மேலே படறதில்லை.
உஸ்ஸ்ஸ்ஸ்! அப்பா என்ன வெய்யிலு ந்னு சொல்லி நாம வெயிலை தவிர்க்கறோம். ஆனா வைட்டமின் டி தயாரிக்க தேவையான யூவி பி கதிர்கள் இருக்கிற வெயில் நடுப்பகல்லதான் இருக்கு!
அந்த காலத்துல இப்படி இல்லையே! நாங்க பள்ளிக்கு வெயில்ல நடந்து போய் வெயில்லதான் நடந்து வந்தோம். அரைக்கால் சட்டைதான் போட்டுக்கொண்டு இருந்தோம். வீட்ல பேண்ட் கேட்டா எல்லாம் பத்தாம் க்ளாஸ் போன பிறகு பாத்துக்கலாம்பாங்க! இப்ப குஞ்சு குளுவான் கூட முழுக்கால் பேண்ட்தான் போடுது!
பிடி பீரியட் வெய்யில்லதான் நடக்கும். லீவு விட்டாச்சுன்னா யார் வீட்ல இருப்பாங்க? மைதானம்தான்; விளையாட்டுதான்!
பெரியவங்க முக்கால்வாசி வேட்டிதான் அணிவாங்க. அதையும் மடிச்சுவிட்டுகிட்டு வெய்யில்ல நடப்பாங்க. கிராமத்துவாசிகள் இன்னும் சௌகரியம். இடுப்புத்துணி தவிர ஒண்ணும் இருக்காது. வயல்ல வேலை செய்யறவங்கன்னா ஒரு கோமணம் மட்டுமே!
பெண்கள் வீட்டு மொட்டை மாடி, தோட்டம்ன்னு ஏதேனும் வெயில் அடிக்கற இடத்தில அப்பளம், வடாம், வத்தல் ந்னு கிளறிக்கொட்டி எதையாவது வெய்யில்ல செஞ்சுகிட்டு இருப்பாங்க.
அப்ப சைக்கிளை பார்க்கிறதே கூட அரிது! நடைதான் முக்காலே மூணு வீசம்.
இப்ப பக்கத்துத்தெரு கடைக்கு போகக்கூட ஸ்கூட்டி, மோட்டார் சைக்கிள்ன்னு வேண்டி இருக்கு! யாருக்கு டைம் இருக்கு?

சரி சரி சரி! ஒத்துக்கிடறேன். இப்ப என்ன செய்யலாம்ன்னு சொல்லுங்க! வைட்டமின் டி சரியா இருக்கான்னு அளந்து பாக்க முடியுமா? அதை மருந்தா சாப்பிடலாமா?

வைட்டமின் டி யை அளந்து பார்க்கலாம். அதுக்கான கட்டணம்தான் கொஞ்சம் அதிகம். சுமார் ஆயிரம் ரூபாய்! தேவையானா மருந்தா சாப்பிடலாம். ஆனா அது வைட்டமின் டி 3 ஆ இருக்க வேண்டியது அவசியம். டி2 சுலபமா கிடைச்சாலும் சில ஆய்வுகளில அது பாதுகாப்பில்லைன்னு சொல்லி இருக்காங்க. காட் மீன் எண்ணை, பால், வெண்ணெய், பாலாடைக்கட்டி போல சில உணவுப்பொருட்களிலேயும் அது இருக்கு. ஆனால் போதாது! வாயால சாப்பிடாம ஊசி போல போடறது ரொம்பவே ரிஸ்க்! சுலபமா ஓவர் டோஸ் ஆயிடும்!
மேலும் தோல் தயாரிக்கறது சல்பேட்டட் வைட்டமின் டி3. அதுல் தண்ணிரில கரையும் என்பதால் உடம்பு முழுதும் போய் வேலை செய்ய முடியும்!
அதனால் இயற்கையா உடம்பு தயாரிக்கற வைட்டமின் டி தான் உசிதம். முன்ன மாதிரி வெய்யில்ல வேலை செய்யறதில்லை என்கிறதால இதுக்குன்னு மெனெக்கெட்டு வெய்யில்ல போய் படுக்கணும்!
 (தொடரும்)

4 comments:

  1. முன்ன மாதிரி வெய்யில்ல வேலை செய்யறதில்லை என்கிறதால வேலை வெட்டி எல்லாம் விட்டுட்டு வெய்யில்ல போய் நிக்கனும். அதுக்கு வெய்யில்ல இருககறாப்ல வேலை ஒன்னு செய்யலாம். அப்பளம் வடகம் போட்டுட்டு அதனை விற்பனை செய்தால் ரெட்டிப்பு விட்டD கிடைக்கும

    ReplyDelete
  2. ithu eppolerunthu!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! just innikku than parkiren.

    ReplyDelete
    Replies
    1. ம்க்கும்! சரியான தூ.மூ! எவ்ளோ போஸ்ட் வந்திருக்கு! எல்லாம் ப்ளஸ்ல வேற ஷேர் ஆச்சு! இப்ப வந்துட்டு.... ஹும்! போய் எல்லாத்தையும் படிங்க. எல்லாம் ரொம்ப முக்கியமான பதிவுகள்!

      Delete