Friday 10 July 2015

குழந்தைகளுக்கு உணர்வு சார் நுண்ணறிவு -1

உணர்வு சார் நுண்ணறிவு - குழந்தைகளுக்கு ஒரு அறிமுகம்.
 (http://www.6seconds.org/2010/09/15/smarter-about-feelings/ இந்த கட்டுரையை தழுவி எழுதப்பட்டது. நன்றி 6seconds.org !
உங்க உணர்ச்சிகளைப்பத்தி உங்களுக்கு தெரியுமா? அதை எப்படி கத்துக்கொண்டீங்க?
உணர்ச்சிகளை நீங்க ஆளறீங்களா இல்லை உணர்ச்சிகள் உங்களை ஆளுதா? சில உணர்ச்சிகள் சுலபமா புரியுது; சிலது குழப்பமா இருக்கா?

ஒரு விபத்து போல நான் ஒரு வேலையில சேர்ந்தேன். அதில மக்களுக்கு உணர்ச்சிகளைப்பத்தி சொல்லிக்கொடுக்க வேண்டி இருந்தது. அதனால நிறைய கத்துக்க வேண்டி இருந்தது. நிறைய படிச்சேன், நண்பர்களுடன் பேசினேன். என்னோட உணர்ச்சிகள் மத்தவங்க உணர்ச்சிகள், எதிர்வினைகள் குறிச்சு இன்னும் கவனமா பார்க்க ஆரம்பிச்சேன். இந்த உணர்வு சார் நுண்ணறிவு பத்தி கத்துக்கொண்டது என்னை இன்னும் சந்தோஷமா, பலமா ஆக்கினது மட்டும் இல்லாம நிறைய சாதிக்கவும் வைச்சது. அதனால் உங்களோட அதை குறிச்ச சில எண்ணங்களை பகிர்ந்து கொள்ளலாம்ன்னு நினைக்கிறேன்.
உணர்வு சார் நுண்ணறிவு என்கிறது என்ன? உணர்வுகளோட உறவாடுவதில இன்னும் திறமையோட இருக்கறது. இதை தெரிஞ்சுக்கொண்டா இன்னும் நல்ல முடிவுகளை எடுக்கலாம்; மத்தவங்களோட இன்னும் நல்லா உறவாடலாம். நிறைய பேர் இது என்ன உணர்வு சார் நுண்ணறிவு? கேள்விப்பட்டதே இல்லையே என்கிறாங்க. இதுவும் மத்ததை போலவே ஒரு நுண்ணறிவுதான். அதென்ன நுண்ணறிவு?
நுண்ணறிவு இருக்கறவங்க விஷயங்களை உள்வாங்கி பிரச்சினைகளை தீர்க்க அவற்றை பயன்படுத்துவாங்க. உதாரணமா கணக்குல புலியா இருக்கறவங்க என்ன செய்வாங்க? எண்களை கவனிப்பாங்க. அதுல குறிப்பா இருப்பாங்க. அதனால கணக்கு போடும் போது சுலபமா போடுவாங்க.
அது போலத்தான் உணர்வு சார் நுண்ணறிவும். உணர்ச்சிகளை குறித்து திறனோட இருக்கறவங்க தன்/ மத்தவங்க உணர்ச்சிகளை நல்லா கவனிப்பாங்க. விரிவா அவற்றை வகைப்படுத்தவும் விவரிக்கவும் தெரியும். இதனால உணர்ச்சி சார்ந்த விஷயங்களில் பிரச்சினைகளை திறமையா கையாளுவாங்க. உதாரணமா எப்படி ஒரு நல்ல நண்பனா இருக்க முடியும் என்பது பத்தி இவர்களுக்கு சரியான எண்ணம் இருக்கும்.
இது ஏன் முக்கியம்?
சில வருடங்களுக்கும் முன்னே நானும் என் நண்பி அனபெல் ஜென்ஸனும் உணர்வுசார்நுண்ணறிவு எப்படி அவர்களுக்கு உதவியாக இருந்தது என்று சில மாணவர்களை கேட்டோம். அவங்க சொன்ன பதில்களில் சில இதோ:
தனிமை இல்லாம போச்சு.
மத்தவங்களோட சேர்ந்து இருக்கறதா உண்ர்ந்தேன்.
மத்தவங்க சொல்லறதை எப்படி காது கொடுத்து கேட்கணும்ன்னு தெரிஞ்சு கொண்டேன்.
நான் எப்படி இன்னும் நல்ல நண்பனா இருக்க முடியும்; என் நண்பர்களை இன்னும் நல்ல நண்பர்களா இருக்கச்சொல்ல முடியும்ன்னு தெரிஞ்சுகொண்டேன்.
மத்தவங்களோட சேர்ந்து எல்லாரோடைய வாழ்க்கையையும் இன்னும் நல்லதாக்கினோம்.
என் உணர்ச்சிகள் என் கட்டுக்குள்ள இருக்கறதா தோணித்து.


இதெல்லாம் எப்படி இருக்கு? :-)





உணர்வு சார் நுண்ணறிவு உள்ளவங்க நல்ல நண்பர்கள்!

No comments:

Post a Comment