Friday 10 July 2015

குழந்தைகளுக்கு உணர்வுசார்நுண்ணறிவு -2

கடந்த சில வருஷங்களில உணர்வுசார்நுண்ணறிவு பத்தி நிறைய ஆராய்ச்சிகள் நடந்து இருக்கு. மக்களுக்கு உதவ இதை எப்படி அளக்கறதுன்னு ஆராய்ச்சிகள் செய்திருக்காங்க.. இந்த ஆராய்ச்சிகள், எங்களோட அனுபவம் எல்லாம் என்ன சொல்லுதுன்னா, உணர்வுசார்நுண்ணறிவு சிலருக்கு சிலதை குறைக்குது; சிலருக்கு சிலதை அதிகமாக்குது!


எதெல்லாம் அதிகமா இருக்கலாம் எதெல்லாம் குறைவா இருக்கலாம்ன்னு உங்களுக்கு கற்பனை இருந்தா சொல்லுங்க!




இதெல்லாம் நமக்கு குறைஞ்சா எவ்வளோ நல்லா இருக்கும்?
ரைட்! இதெல்லாம் இன்னும் அதிகமா இருந்தா எப்படி இருக்கும்?
நானும் என் அக்காவும் சிரிச்சுத்தான் விளையாடிகிட்டு இருந்தோம். திடீர்ன்னு அவ எனக்கு கோபமூட்ட ஆரம்பிச்சா…. ஹும்! இப்ப என்னை வெளியே அனுப்பிட்டாங்க!
எனக்கு நிறைய நல்ல நண்பர்கள் இருக்காங்க. அவங்களோட எப்போ வேணா பேச முடியும். நான் சந்தோஷமா இருக்கேன்.
போரடிக்குது. நிறைய செய்ய வேண்டிய வேலை எல்லாம் இருக்குன்னு தெரியும்தான். இருந்தாலும் எதுவும் செய்ய இப்ப எனக்கு சக்தி இல்லே…………
பசங்க ஏதாவது தப்புத்தண்டா பண்ணா என்னால அவர்கள நிறுத்த முடியும். குறைஞ்சது என்னால அதுல மாட்டிக்காம நகர்ந்துட முடியும்.
என் நண்பர்கள் விளையாட்டுல என்னையும் சேத்துகிட்டாங்கன்னா நல்லா இருக்கும். ஆனா எப்படி அவங்களை அதை செய்ய வெக்கறது?
சில சமயம் மோசமான மூட்ல இருந்தேன்னா கொஞ்ச நேரத்துல அதுலேந்து வெளி வந்துட முடியும்.
என்கிட்ட நிறைய ஐடியா எல்லாம் இருக்கு. ஆனா யாரும் நான் சொல்லறதை கேட்க மாட்டேங்கறாங்க. நான் திமிரோட பேசறேனாம்! ஆனா அவங்க ஐடியா எல்லாம் போரடிக்குதே?
ஹோம் வொர்க்கா? என் அப்பா அம்மாவுக்கு அது பிரச்சினையே இல்லை. ஏன்னா அதை அவங்க சொல்லாமலே செய்து முடிக்க கத்துக்கிட்டேனே?
அந்த பரிட்சைல எல்லா விடைகளும் எனக்குத்தெரியும். ஆனா அந்த நேரத்துல ஒண்ணுமே ஞாபகத்துக்கு வரலை!
என் தம்பி சில சமயம் கடுப்படிப்பான்; ஆனா அதை எப்படி சமாளிக்கறதுன்னு எனக்குத் தெரியும். அதனால எப்பவும் நாங்க ஜாலியா விளையாடிக்கிட்டே இருப்போம்!




படத்தில இருக்கற பசங்க எல்லாரும் எப்படி இருக்காங்க? என்ன உணர்ச்சில இருக்காங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம்!
இதுல யாருக்கும் இருக்கிற பிரச்சினையை உங்களால தீர்த்து வைக்க முடியுமா?



No comments:

Post a Comment