Wednesday 15 July 2015

குழந்தைகளுக்கு உணர்வுசார்நுண்ணறிவு - 5

நீங்க ஒரு விஞ்ஞானி!



 மாணவர்களுக்கு உணர்வுசார்நுண்ணறிவை சொல்லித்தர சிக்ஸ்செகண்ட்ஸ் ல நாங்க ஆசிரியர்களுக்கு ஒரு நடைமுறையை சொல்லித்தரோம். அதுக்கு சுய அறிவியல்ன்னு பேர். இப்படி ஏன் செஞ்சோம்ன்னா மாணவர்கள் அறிவியல் துணையோட தன்னைப்பத்தி தெரிஞ்சுக்கணும் என்கிறதால.  

விஞ்ஞானி என்ன செய்யறார்? கவனிக்கிறார். நடக்கிற விஷயங்கள் வழக்கம் போல நடக்குதா ந்னு பார்க்கிறார். ஏதேனும் வித்தியாசமா நடந்தா அதை விசேஷமா கவனிக்கிறார். அப்ப கோவமோ அலுப்போ இருக்கிறதில்லை. வித்தியாசமா ஏன் எப்படி நடந்ததுன்னு ஒரு ஆர்வம் மட்டுமே இருக்கும். இந்த ஏன் எப்படி என்கிற கேள்விகள்தான் ஒரு விஞ்ஞானியோட முக்கிய பலமான ஆயுதங்கள். விஞ்ஞானிகள் அடிக்கடி சொல்லிக்கிட்டே இருப்பாங்க, ”ம்ம்ம்ம் இது இப்படி இருக்குமோ?…. இல்லை அப்படி இருக்குமோ?“ இதே போல யோசிங்கன்னு உங்ககிட்ட கேட்டுக்கறேன்!
  

No comments:

Post a Comment