Monday 27 July 2015

குழந்தைகளுக்கு உணர்வுசார்நுண்ணறிவு - 9

மருந்தாகும் உணர்ச்சிகள்:
இதை கொஞ்சம் கற்பனை பண்ணி பாருங்க! இப்படீஈஈ காட்டு வழியா போறீங்க. வழில ஒரு அழகான பேழை கிடக்குது. அது மேல அதிசயமான சில குறியீடுகள். திறந்து பாத்தா வெல்வெட்ல அழகான பாட்டில்கள் … எட்டு பாட்டில்கள் இருக்கு. சிலது பட்டை தீட்டின ஸ்படிகம் மாதிரி. சிலது ஆழமான பழுப்பு வண்ணம். இப்படி ஒவ்வொண்ணும் ஒரு மாதிரி. ஒவ்வொண்ணுத்திலேயும் வண்ண வண்ணமா ஏதோ திரவம். இந்த திரவங்கள்தான் எட்டு உணர்ச்சிகள்!

ஆங்கிலத்தில உணர்ச்சிகள் தொடர்பான வார்த்தைகள் மூவாயிரத்துக்கு மேலே இருக்காம். இதெல்லாம் எங்கிருந்து வந்தது? ஆராய்ச்சியாளர்கள் சொல்வது எட்டு உணர்ச்சிகளே அடிப்படை. மத்தது எல்லாம் வெவ்வேறு விகிதத்தில.அவற்றோட கூட்டு. ’ப்லட்சிக்’ ந்னு ஒரு விஞ்ஞானி. அவர்தான் எட்டு உணர்ச்சிகள்ன்னு வரையறுத்தவர். ஏன் இதை அடிப்படைன்னு சொல்கிறார்ன்னா இவை எல்லாம் நாம் உயிர் வாழ உதவுதாம்! அதெல்லாம் என்னென்னன்னு பார்க்கலாமா?


அடிப்படை உணர்ச்சி
அதன் பயன்
கோபம்
பிரச்சினைகளை எதிர்த்து போராட
எதிர்பார்ப்பு
தீர்க்க தரிசனமும் திட்டமிடுதலும்
மகிழ்ச்சி
எது முக்கியம் என்று நினைவுறுத்த
நம்பிக்கை
உதவி செய்வோருடன் உறவு கொள்ள
அதிர்ச்சி
புதிய சூழ்நிலையை கையாள
பயம்
ஆபத்திலிருந்து காத்துக்கொள்ள
துக்கம்
நாம் விரும்புவருடன் உறவு கொள்ள
அருவருப்பு
ஆரோக்கியம் இல்லாததை நிராகரிக்க




















சும்மா எட்டு உணர்ச்சி குடுவைகளை வரைந்து அவை என்னென்ன வர்ணத்தில இருக்கும்ன்னு வண்ணம் தீட்டிப்பாருங்களேன்!

கோபம் என்ன வண்ணம்? மகிழ்ச்சி? அதோட குடுவைகள் எப்படி இருக்கும்?

என் கற்பனையில மகிழ்ச்சி என்கிறது தங்க நிற பொறி பறக்கும் பிரகாசமான குடுவை; அதன் உள்ளிருந்து வெள்ளையான ஒளி சிதறுது!

உங்க கற்பனை என்ன சொல்லுது?

No comments:

Post a Comment