Wednesday, 29 July 2015

குழந்தைகளுக்கு உணர்வுசார்நுண்ணறிவு - 10

சும்மா எட்டு உணர்ச்சி குடுவைகளை வரைந்து அவை என்னென்ன வர்ணத்தில இருக்கும்ன்னு வண்ணம் தீட்டிப்பாருங்களேன்.
கோபம் என்ன வண்ணம்? மகிழ்ச்சி? அதோட குடுவைகள் எப்படி இருக்கும்?
என் கற்பனையில மகிழ்ச்சி என்கிறது தங்க நிற பொறி பறக்கும் பிரகாசமான குடுவை; அதன் உள்ளிருந்து வெள்ளையான ஒளி சிதறுது!

இந்த குடுவைகளுக்கு மூடி இருக்கும். அந்த மூடி சுழட்டினா திரவத்தை சொட்டு சொட்டு வெளியே விட வசதியோட இருக்கும். நீங்க இந்த குடுவையை எல்லாம் எடுத்து விரும்பின எண்ணிக்கையில சொட்டுகளை விட்டு கலந்து புதுசா ஒரு மந்திர கஷாயம் செய்ய முடியும்! இப்படி கலக்கும்போது சில சமயம் அதுகளோட வண்ணம் மாறும். சில சமயம் கலங்கலாயிடும். சில சமயம் அதுலேந்து தீப்பொறி பறக்கும்; சில சமயம் அது மூடுபனி போல ஆயிடும்.
இந்த ’சமையல் கலை’ க்கு ஒரு சமைத்துப்பார் புத்தகமும் நான் பார்க்கலை! ஆனா வித்தியாசமான உணர்ச்சிகள் கலந்து என்ன வரலாம்ன்னு ஒரு சின்ன அனுமானம்:


உணர்ச்சி
கலந்த பொருட்கள்
பொறுமையின்மை
கோபம் (அங்கே ஒரு பிரச்சினை இருக்கு) +எதிர்பார்ப்பு (தீர்க்க தரிசனம்)
கவலை
பயம் (ஆபத்து) + எதிர்பார்ப்பு (தீர்க்க தரிசனம்)
சலிப்பு
அருவருப்பு(நிராகரிப்பு) +துக்கம் (இழப்பு) +பயம் (இக்கட்டு)
நம்பிக்கை
எதிர்பார்ப்பு (தீர்க்க தரிசனம்) + மகிழ்ச்சி (எதிர்பார்ப்பு நிறைவேற்றம்)
மரியாதை
நம்பிக்கை (ஒப்புக்கொள்ளுதல்) + மகிழ்ச்சி (எதிர்பார்ப்பு நிறைவேற்றம்) +எதிர்பார்ப்பு (தீர்க்க தரிசனம்)
ஏமாற்றம்
துக்கம் (இழப்பு) + கோபம் (அங்கே ஒரு பிரச்சினை)
பொறாமை
கோபம்(இழப்பு) +பயம் (இக்கட்டு) +அருவருப்பு (நிராகரிப்பு)
தனிமை
துக்கம் (இழப்பு) +பயம் (இக்கட்டு) + அருவருப்பு (நிராகரிப்பு)

இதெல்லாம் ஏதோ மாயா மந்த்ர ஜால கதை மாதிரி தோணினாலும்உண்மையில் உணர்ச்சிகள் எல்லாமே ரசாயனங்கள்தான்குடுவைகள் இருக்கிற பேழை மாதிரிதான் நம்மோட மூளையும் உடம்பில இன்னும் சில பாகங்களும். அவை இந்த விதவிதமான ரசாயனங்களை சுரக்குதுஇவை கலந்து நம்மோட உடம்பில பாயும்போது நம்மோட ஒவ்வொரு திசுவையும் இது பாதிக்குதுஅதாவது உடம்பு தன்னுக்குள்ளே ஒவ்வொரு இடத்துக்கும் செய்தி அனுப்பறவிதம்தான் இது!




















இவங்க எல்லாரும் அடிப்படையில எப்படி உணர்கிறாங்க? கோபம்? துக்கம், மகிழ்ச்சி? வேற எதுவும்?

No comments:

Post a Comment