உன்னிப்பா
கவனிக்கிற விஞ்ஞான ஆராய்ச்சியாளர்
பத்தி நான் எழுதினது நினைவிருக்கா?
இப்ப நீங்களேதான்
உங்களை ஆராய்கிற விஞ்ஞானி.
கொஞ்ச நாளுக்கு
இதை செய்யுங்க. பலமான
உணர்ச்சி ஒண்ணு வரப்ப என்ன
செய்யறோம்? சண்டை
போடறோமா? அமைதியாகிடறோமா?
ஓடிப்போயிடறோமா?
இந்த உணர்ச்சியை
இன்னொரு வித்தியாசமான
உணர்ச்சியால மறக்கடிக்கறோமா?
நாளாக ஆக
நாம் சில மாதிரி வழிகளை
கடைபிடிக்கிறதை பார்க்கலாம்.
அப்படி கண்டு
பிடிச்சிட்டா… பாராட்டுக்கள்!
நீங்க பெரிய
விஞ்ஞானி! உணர்வுசார்நுண்ணறிவில
பெரிய படியை கடந்துட்டீங்க!
மறக்காதீங்க!
உணர்ச்சிகள்
என்பது சக்தி மற்றும் தகவல்.
அவை ஜூஸ்
மாதிரி பல விகிதங்களில கலந்து
பல வித உணர்ச்சிகளா மாறும்.
எண்ணங்கள்,
உணர்ச்சிகள்
செயல்கள் இதெல்லாம் வேற வேற.
No comments:
Post a Comment