Monday, 10 August 2015

குழந்தைகளுக்கு உணர்வுசார்நுண்ணறிவு - 14

சமீபத்தில எம்மாவும் மேக்ஸும் வழக்கமான பிரச்சினை ட்ரெய்ன்ல ஏறிகிட்டு இருந்தாங்க. நான் அவங்களை கொஞ்சம் நிறுத்தி பிரச்சினை ட்ரெய்ன்ல ஏறி இருக்கீங்கன்னு தெரியுதா ந்னு கேட்டேன். ’இல்லை’ன்னு உறுமிட்டு எம்மா சண்டையில அடுத்த கட்டத்துக்கு தயார் ஆகிட்டு இருந்தா! வாதத்துல ஜெயிக்கிறதுதான் முக்கியம். தன் எதிர்வினையை - தான் பிரச்சினைல மாட்டிக்கிறதை - அவ கவனிக்கவே இல்லே! நான் சொன்னது அவ தலையில ஏறவே இல்லை!

ஆனா இது எனக்கு புரியுது! நானும்தான் பிரச்சினை ட்ரெய்ன்ல ஏறின பிறகு கீழே இறங்கறது ரொம்ப கஷ்டம் என்கிறதை அனுபவிச்சு இருக்கேன். எனக்குள்ள ஒரு பகுதி இன்னும் சண்டை போடுன்னு தூண்டிகிட்டு இருக்கும்! உதாரணமா என் மனைவி கூட சின்ன பேச்சுவார்த்தை சண்டை முத்திப்போயிடுது. எனக்கு அப்ப நல்லாவே புரியுது; இனிமே இதை தொடர்ந்தா இன்னும் பெரிய சச்சரவுலதான் முடியும்ன்னு. இருந்தாலும் சும்மா இருக்காம இன்னொரு வாதத்தை எடுத்து விடுவேன்! இல்லை சில சமயம் எனக்கு வருத்தம் ஏற்பட்டா எப்படியாவது திருப்பி வருத்தணும்ன்னு நினைப்பேன். அப்ப கவனிச்சது எனன்னனா எவ்வளோ நேரம் இந்த ட்ரெய்ன்ல இருக்கோமோ அவ்வளோ கஷ்டம் நிறுத்தறதும், இறங்கறதும்! சூடு அதிகமாகிக்கிட்டே போகும்; என் உணர்ச்சிகளும் இன்னும் அதிக சிக்கலா ஆகும்!

ட்ரெய்னை எவ்வளோ சீக்கிரம் முடியுமோ அவ்வளோ சீக்கிரம் நிறுத்தணும் என்கிறது தெளிவு! எதிர்வினை துவங்கி உணச்சிகள் சிக்கலாகும் முன்னே!

முன்னே வழக்கமான வழிகளைப்பத்தி பேசினோம் நினைவிருக்கா? உதாரணமா என்னோட வழக்கமான வழி “எனக்கு வருத்தமா இருந்தா நான் மத்தவங்களை வருத்துவேன்” ம்ம்ம்? இது என்னோட பிரச்சினை ட்ரெய்ன்! ஏன்னா இந்த வழியில போனா போய் சேருகிற இடம் எனக்கு ரொம்பவே கஷ்டத்தை கொடுக்கிறதாத்தான் இருக்கும்!

இந்த மாதிரி ’இது என்னோட வழக்கமான வழி’ ந்னு தெரிஞ்சா ட்ரெய்ன் வேகம் பிடிக்கறது முன்னே முடிஞ்சா இறங்கிடலாம்.

சில சமயம் எனக்கு கொஞ்சம் வருத்தமா இருக்கும். அப்ப நான் கொஞ்சம் இடக்கு பண்ண ஆரம்பிப்பேன். கூட இருக்கற ஆசாமி கொஞ்சம் சத்தமா பேச ஆரம்பிப்பாரு. நான் பொல்லாத்தனமா ஏதாவது சொல்லுவேன். அவங்க திட்டுவாங்க. எனக்கு அவங்களை அடிக்கணும் போல தோணும். அதை அடக்கிகிட்டு எதிரி நிஜமா வருத்தப்படறா மாதிரி ஏதாவது சொல்லுவேன். சீக்கிரமாவே ரெண்டு பேரும் கோபமாவும் உள்ளுக்குள்ள மனசு காயம் பட்டும் இருப்போம்! அதுக்கப்பறம் பிரச்சினையை எதுவும் செய்ய முடியாது. தீர்வே இல்லாம போயிடும்!

இந்த மாதிரி நேரங்களில நான் என்னோட உணர்ச்சிகளை கவனிக்காம உதாசீனம் செய்யறேன் போலிருக்கு. எனக்கு கொஞ்சம் வருத்தமா இருக்கிறப்பவே நான் அதை கவனிக்கிறதில்லை. இது எனக்கு கிடைக்கிற ஒரு செய்தின்னு பார்க்கிறதில்லை. அதனால் இன்னும் மேலே போறேன். நல்ல காலமா இப்பல்லாம் இதை கவனிக்க கத்துகிட்டேன். இது பிரச்சினை ட்ரெய்ன்ன்னு புரிஞ்சுக்கறேன். அதனால இப்பல்லாம் எனக்கு கொஞ்சம் வருத்தமா இருந்து ’பழிக்குப்பழி!’ ந்னு தோணுகிறப்ப எல்லாம் “ஹேய்! இது நான் பயணிக்க விரும்பற ட்ரெய்ன் இல்லே” ந்னு சொல்லிப்பேன். கொஞ்சம் வருத்தப்படறோம் என்கிறதை கவனிச்சா ’அட! கொஞ்சம்தானே வருத்தப்படறோம்; வேற ட்ரெய்ன்ல போகலாம்’ ந்னு தேர்ந்தெடுக்க முடியும். பிரச்சினையை சுலபமா தீர்த்துடலாம். எதிராளியோட ஒரு அமைதியான உரையாடல் போதும். “ நீ …… ந்னு சொன்னப்ப எனக்கு வருத்தமாயிடுத்து. என்னை வருத்தணும்ன்னு நீ நினைச்சியா என்ன? வேணும்ன்னா இப்ப நாம் போயிட்டு சில நிமிஷங்கள் கழிச்சு இதப்பத்தி சுமுகமா பேசலாமா?”
இந்த ரீதியில பேசப்போக அனேகமா எல்லாம் சரியாயிடும்!

நிஜ ட்ரெய்ன் போலவே இந்த ட்ரெய்னும் கிளம்பியாச்சுன்னா சீக்கிரமாகவே வேகம் எடுத்திடும். அதே போல நேரம் ஆக ஆக இன்னும் வேகமா போக ஆரம்பிச்சுடும். எவ்வளோ சீக்கிரம் நாம பிரச்சினை ட்ரெய்ன்ல இருக்கோம்ன்னு நாம் தெரிஞ்சுக்கிறோமோ அவ்வளோ சீக்கிரம் இறங்கிடலாம். நல்லது!

நீங்க எப்படி?
பிரச்சினை ட்ரெய்ன்ல இருக்கிறதை கவனிக்கறீங்களா?
எந்த உணர்வுகள் உங்களை பிரச்சினை ட்ரெய்னுக்குள்ள தள்ளுது?
எந்த உணர்வுகள் அதை வேகமா போக வைக்குது?
அதுலே ஏறாம இருந்தா அது உங்களுக்கு எப்படி உதவி செய்யும்?ஆமாம்! எல்லாத்தையும் விட நல்லது அந்த ட்ரெய்ன்ல ஏறாம இருக்கறது. இது எப்ப முடியும்ன்னா உணர்ச்சிகள் வளரும் முன்னே அது சின்னதா இருக்கும்போதே அதை கவனிச்சுட்டோம்ன்னா முடியும்.