Tuesday 11 August 2015

குழந்தைகளுக்கு உணர்வுசார்நுண்ணறிவு - 15

ஆமாம்! எல்லாத்தையும் விட நல்லது அந்த ட்ரெய்ன்ல ஏறாம இருக்கறது. இது எப்ப முடியும்ன்னா உணர்ச்சிகள் வளரும் முன்னே அது சின்னதா இருக்கும்போதே அதை கவனிச்சுட்டோம்ன்னா முடியும்.
ம்ம்ம் ஏறியாச்சு! இப்ப தெரியுது, என்ன செய்ய?
பிரச்சினை என்கிற ஸ்டேஷனுக்கு போகும் முன்பேயே எமர்ஜென்ஸி செய்னை பிடிச்சு இழுத்து ட்ரெய்னை நிறுத்தறதுதான் ஒரே வழி!

அடுத்த நிறுத்தம்: தேர்வு
ஆதர்சமா ட்ரெய்ன் கிளம்பும் முன்னேயே உங்க உணர்ச்சிகளையும் வழக்கமான வழில போறதையும் கவனிச்சு அப்பவே சுதாரிச்சுக் கொண்டு ஏறாம இருக்கணும். ஆனாலும் நாம் பலரும் ஏறிடறோம். நல்ல செய்தி என்னன்னா, ட்ரெய்ன்லேயே இருக்கனும்னு கட்டாயம் ஒண்ணுமில்லே!
முதல்படி நாம் ட்ரெய்ன்லே ஏறிட்டோம் என்கிறதை கவனிக்கறது, ரைட்! கவனிச்சாச்சு. இப்ப என்ன செய்யணும்?



















முன்னேயே பார்த்த மாதிரி உங்களுக்குள்ளே தொடர்ந்து ட்ரெய்ன்லேயே போக ஒரு உந்துதல் இருக்கும். இன்னொரு பக்கம் இறங்கிடணும்னு தோணும். இப்படி ஒரு தேர்வு இருக்குன்னு தெரியறது ஒரு சக்திமிக்க ஆயுதம்! நன்நம்பிக்கையை (optimism) செயலாக்குதல் என்கிற பயிற்சி இதுக்கு துணை போகும்! நீங்க உதவி கிடைக்கும் என்கிற நம்பிக்கையே இல்லாம இருந்தா உங்களுக்கு ஒரு தேர்வு இல்லைன்னே நினைப்பீங்க. யோசிச்சு பாருங்க! இதை விட மோசமான சூழ்நிலையிலேந்து முன்னே சரியான வழியை கண்டுபிடிச்சு வெளியே வந்து தப்பிச்சு இருப்பீங்க!

மேலும் எப்பவும் சூழ்நிலை மாறிகிட்டேத்தான் இருக்கும். அதான் அதோட இயல்பு. இப்ப இருக்கிற சூழ்நிலையும் மாறும். அதை முழுக்க முழுக்க உங்களுக்கு சாதகமா மாத்த முடியாட்டாலும் கொஞ்சமாவது அப்படி மாத்திக்கலாமே? நாம செய்ய ஏதேனும் இருக்கா? சின்னதா இருந்தாலும் சரி! ஏதேனும்?

மத்த மக்கள் ட்ரெய்ன்ல கூட இருந்தாங்கன்னா இது இன்னும் சிக்கலாகலாம்! நீங்க ட்ரெய்னை நிறுத்த நினைச்சாலும் அவங்க இன்னும் தள்ளு முள்ளுல ஈடுபடுவாங்க. அவங்களை நிறுத்த நீங்க செய்கிற முயற்சி நிலமையை இன்னும் மோசமாக்கலாம். அதனால எல்லாத்தையும் நிறுத்தாம நீங்க மட்டும் வெளியே வர வழியை பார்க்கணும். நீங்க இந்த மாதிரி உங்க பொறுப்பை காட்டினா இன்னும் சிலரும் அதே மாதிரி நடந்துக்குவாங்க.


இந்த மாதிரி வெளியே வர ஒரு உத்தி இருக்கு.  

No comments:

Post a Comment