Thursday 13 August 2015

குழந்தைகளுக்கு உணர்வுசார்நுண்ணறிவு - 16

இந்த மாதிரி வெளியே வர ஒரு உத்தி இருக்கு. அதுக்கு ஆறு வினாடி தாமதம்ன்னு பேரு. இதோட நோக்கம் என்னன்னா உங்க எதிர்வினையை கொஞ்சம் தாமதப்படுத்தி உணர்ச்சி வேகம் தளர விடறதுதான். இது எப்படி வேலை செய்யும்? முன்னேயே பார்த்த மாதிரி உணர்ச்சிவசப்படும்போது மூளையோ உடம்போட சில பாகங்களோ வெளியிடற ரசாயனங்கள் ஆறு வினாடிதான் வேலை செய்யும். நம்மோட நோக்கம் இந்த உடம்புல புதுசா தோன்றி இருக்கிற ரசாயனம் எல்லாம் நீர்த்துபோக விடறதுதான். சாதாரணமா நம் உணர்ச்சி பலமா இருந்தா, நாம் இந்த ரசாயனங்களை மேலும் மேலும் உருவாக்கிக்கறோம். அப்படி இல்லாம கொஞ்சமே கொஞ்ச நேரம் தாமதிக்க, ரசாயன வெள்ளம் மட்டுப்படும். இந்த ஆறு வினாடிகள் தாமதத்தால நம்மோட கவனம் உணர்ச்சி வசப்படும் ’லிம்பிக்’ மூளையிலிருந்து கணக்கா செயல்படும் ’கார்டெக்ஸ்’ மூளைக்கு மாத்தப்படும்.
கார்டெக்ஸ் எப்பவும் எல்லாத்தையும் ஒழுங்கா வெச்சுக்க ஆசைப்படும். அதுக்கு எல்லாம் கணக்கு பண்ணி செய்யவே விருப்பம். அதனால அதை வாய்யா விளையாட்டுக்குன்னு கைய பிடிச்சு இழுக்கலாம்!


















இது கிறுக்குத்தனமா தோணினாலும் செய்ய வேண்டியது இந்த மாதிரி சிலது:
ஆறு எளிதான கணக்கு போடுங்க.
வேத்து மொழி வார்த்தைகள் ஆறு நினைவுக்கு கொண்டு வாங்க.
உங்களுக்கு பிடிச்ச ஆறு பாடல்களை அகர முதலா வரிசைப்படுத்துங்க.
உங்களுக்கு பிடிச்ச ஆறு கார்டூன் பாத்திரங்களை பட்டியல் போடுங்க.


ரைட்? இது எல்லாமே யோசிக்கவும் மூளையை கணக்காசெயல்படவும் வைக்கும்

No comments:

Post a Comment