Monday 17 August 2015

குழந்தைகளுக்கு உணர்வுசார்நுண்ணறிவு - 17

ட்ரெய்னை நிறுத்த இன்னொரு சாதகமான விஷயம் நமக்கு ஒண்ணுக்கு மேற்பட்ட உணர்ச்சிகள் இருக்கலாம் என்கிறது. இதை முன்னேயே பார்த்தோமில்லையா? உதாரணமா உங்களுக்கு துக்கமாகவும் கவலையாகவும் இருக்கலாம். இவை ஆழமான பலமான உணர்ச்சிகள். அதே நேரம் பரிவும் ஈடுபாடும் கூட இருக்கலாம். ஆனா இவை முந்தியவை மாதிரி அவ்வளவு பலமானவை இல்லை என்கிறதால கொஞ்சம் பின்னணில ஒளிஞ்சுகிட்டு இருக்கும். இவற்றை முன்னுக்கு கொண்டு வாங்க! எதுக்கு நம் உணர்ச்சிகளில சிலதை மட்டும் கட்டில்லாம ஓட விடணும்? எல்லாத்தையுமே முன்னுக்கு கொண்டு வருவோம்!

உங்க நண்பர் ஊரை விட்டு போயிட போறாரா? ஹும்ம்ம்ம்! அப்ப துக்கமாத்தான் இருக்கும். இருந்தாலும் வேற உணர்ச்சி எதுவும் இப்ப இல்லையா? நாம் விட்டுப்பிரிய துக்கப்படற அளவுக்கு ஒரு நெருங்கிய நண்பன் இருக்கானேன்னு ஒரு சின்ன சந்தோஷம்?
திருப்பி பார்க்க முடியுமான்னு ஒரு சின்ன சந்தேகம்? அப்படி பார்க்கும் போது எவ்வளோ நல்லா இருக்கும்ன்னு கொஞ்சம் பரபரப்பு இருக்கட்டுமே?

இவ்வளோ விரிவாக்கூடா யோசிச்சு பார்க்க வேண்டாம். ஒரே நேரத்தில பல உணர்ச்சிகள் இருக்கு என்கிறது கவனத்துல இருந்தாலே போதும். அதுவே நம்மோட செயல்களை மாத்திடும். இந்த மாற்றத்தை இன்னும் அதிகமாக்கணும்ன்னா அவற்றின் மேலே இன்னும் கொஞ்சம் கவனம் வைத்து அது என்ன உணர்ச்சின்னோ அல்லது அது ஏன் வருதுன்னோ யோசிச்சா போதும். எந்த ஒரு உணர்ச்சியையுமேக்கூட அதை கவனிக்கறதால இன்னும் பலப்படுத்தலாம்.

உணர்ச்சியை மாத்திக்க முடியுமான்னு இந்த சோதனையை செய்து பாருங்க.
சமீபத்தில உங்க்ளுக்கு எரிச்சலூட்டிய முட்டாள்தனமான விஷயம் ஏதாவது நினைச்சுப்பாருங்க….. அஹ் அஹ்ஹ்… அதை நினைக்கறப்பவே திருப்பி எரிச்சல் வருது இல்லே? ரைட்! இப்ப சமீபத்தில கேட்ட ஜோக் ஒண்ணை நினைச்சு பாருங்க. அது மேல கவனம் இருக்கட்டும். இப்ப எரிச்சல் எங்கே போச்சு? இப்ப அந்த முட்டாள்தனமானது கொடுக்கிற உணர்வு என்ன? வருத்தமா? கவலையா? ம்ம்ம் எப்படியும் வேற ஒண்ணு!

பாத்தீங்களா? உங்க உணர்வுகளை மாத்த முடியும்!

No comments:

Post a Comment