Saturday 8 August 2015

குழந்தைகளுக்கு உணர்வுசார்நுண்ணறிவு - 13

என் குழந்தைகள் எம்மாவும் மேக்ஸும் எப்பவும் சண்டை போட்டுப்பாங்க. எட்டு கோடியாவது தரமா இருந்தாலும் அதே விதமான சண்டைதான்! இதுதான் அந்த சண்டையோட கால அட்டவணை.

1. ரெண்டு பேரும் ஜாலியா விளையாடிகிட்டு இருப்பாங்க.
2. மேக்ஸுக்கு கொஞ்சம் சலிப்பு தட்டிடும். அதனால கொஞ்சம் ’புரட்சி’ செய்வான்! எம்மா இதனால அவனை கொஞ்சம் அடக்கி விளையாட்டை இன்னும் சுவாரசியமாக்க பார்ப்பா. இது மேக்ஸூக்கு பிடிக்காம அவன் இன்னும் கொஞ்சம் தகராறு செய்வான்.
3. எம்மாவுக்கு இவனோட தகராறு போக்கு பிடிக்காது; அவ இன்னும் தீவிரமா விதிகளை அமுல் படுத்தப்பார்ப்பா. இதனால் மேக்ஸ் இன்னும் முரண்டு பிடிப்பான்.
4. ரெண்டு பேரும் கத்தி கலாட்டா செய்ய ஆரம்பிப்பாங்க. நான் போய் ரெண்டு பேரையும் பிரிச்சு ஆளுக்கு ஒரு பக்கம் அனுப்புவேன்.




















இரண்டாவது படியிலேயே எங்களுக்கு (எனக்கும் அவங்க அம்மாவுக்கும்) இது சண்டையில போய் முடியப்போகுதுன்னு தெரிஞ்சுடும். சூடு அதிகமாகி ஒத்தருக்கொத்தர் சளைக்காம மிஞ்சப்பார்ப்பாங்க. இறுக்கம் அதிகமாயிடும். நேரம் அதிகமாக ஆக ரெண்டு பேருக்குமே ’வண்டியிலிருந்து இறங்கி’ பின் வாங்கறது முடியாம போயிடும்.
இதுக்கு நான் பிரச்சினை ட்ரெய்ன் ந்னு பேர் வெச்சு இருக்கேன். இது துவங்கி பயணிச்சு பெரிய களேபரத்துல முடியற வழி இதுதான்.
பிரச்சினை ரொம்ப சின்னதா இருக்கலாம். நீயா நானா என்கிற சின்ன சச்சரவு… இல்லை திருட்டு, மற்றவர்களுக்கு துன்பம் உண்டாக்குவது, எதையாவது உடைப்பது போல பெரிசா இருக்கலாம். சில சமயம் அது உள்ளேந்து வரலாம். ஒரு ஆழமான துக்கம்,உங்க மேலேயே பொங்கிகிட்டு இருக்கிற கோபம்…

இந்த பிரச்சினை ட்ரெய்ன் போய் சேருகிற இடமும் பலதா இருக்கலாம். சில சமயம் பிணக்கு, சில சமயம் தனிமை. சிலது சேருகிற இடம் இன்னும் மோசம். அடி தடி, ஆபத்து, சிறைச்சாலை போல கூட கொண்டு விட்டுடலாம். ஆட்ட குழுவிலிருந்து வெளியே கூட துரத்தப்படலாம். இதெல்லாம் நடக்கலாம்ன்னு அனுபவத்தில தெரிஞ்சுக்கிறோம். ஆனாலும் தவிர்க்க முடியலையே! இந்த போய்சேருகிற இடம் வரத்துக்கு முன்னாலேயே ட்ரெய்னை விட்டு இறங்கிட்டா எவ்வளோ நல்லா இருக்கும்!

சில சமயம் உங்களுக்கு நிலமை கைவிட்டுப் போகுதுன்னு தோணி இருக்கா? கடைசியில இது பெரிய களேபரத்துல கொண்டு விட்டுடும் ந்னு தெரிஞ்சும் அதே வழியில பயணிக்கிறோம், இல்லையா! யாரோ வலுக்கட்டயமா நம்மை இந்த வழியில தள்ளிகிட்டு போறா மாதிரி! வேற தேர்வு எதுவும் தோணாத மாதிரி….













இப்படி நடக்கிறப்ப உங்களுக்கு எப்படி இருக்கு? எந்த மாதிரி பிரச்சினைல உங்களை இது கொண்டு விடுது?

அல்லது  கவனிச்சதுல உங்களுக்கு வர சவால்கள் எல்லாம் ஒரே மாதிரி இருக்கிறதா தோணுதா? உங்க சகோதரி சகோதரன் நண்பன்… யார் கூடவாவது, ஒரே மாதிரி சச்சரவு, சண்டை… திருப்பித்திருப்பி? இந்த மாதிரி நடந்தா நீங்க பிரச்சினை ட்ரெய்ன்ல இருக்கீங்கன்னு அர்த்தம்!

பிரச்சினை ட்ரெய்ன்ல இருக்கிற எப்ப தெரியும்ன்னா...

  1. இதே வழியில முன்னே போயிருக்கோம். நாம வழக்கமா செய்கிற எதிர்வினை ட்ரெய்னுக்கு டீசல் மாதிரி!
  2. நாம் விரும்பாத ஒரு முடிவில இது கடைசியில கொண்டுவிடும்!

No comments:

Post a Comment