Wednesday 19 August 2015

குழந்தைகளுக்கு உணர்வுசார்நுண்ணறிவு - 18

பழைய காலத்து ட்ரெய்ன்ல எல்லாம் நீராவி எஞ்சின்தான். தண்ணியை சூடாக்கி நீராவி தயாரிக்க ஒரு பெரிய அடுப்பு. அதுல கரியை அள்ளிப்போடணும். அது திகு திகுன்னு எரிஞ்சு கொண்டிருக்கும். கரி சாம்பலாக ஆக மேலும் மேலும் கரியை அள்ளி போடணும். வண்டி இன்னும் வேகமா போகணும்ன்னா ட்ரைவர் கரி தள்ளற ஆள்கிட்டே இன்னும் அதிகமா கரியை அள்ளிப்போடச்சொல்லுவார். வண்டி மெதுவா போகணும்ன்னா குறைவா போடச்சொல்லுவார். இப்படி வண்டியோட வேகம் அள்ளிப்போடற கரில இருக்கு!
உணர்ச்சிகளும் அப்படித்தான்! நாம் இன்னும் அதிக உணர்ச்சிவசப்படணும்ன்னா அதுக்கான எரிபொருளை இன்னும் அதிகமா போடுவோம். குறைக்கணும்ன்னா குறைவா போடணும். வண்டியை நிறுத்தணும்ன்னா கரி போடறதை விட்டுடணும். நீராவி அழுத்தம் குறைஞ்சு வண்டி வேகம் மெதுவாகி தானா நின்னுடும். இன்னும் அரிதா நெருப்பை வெளியே இழுத்து தண்ணிவிட்டு அணைக்கறதும் உண்டு. எஞ்சினை பெரிய பழுது பார்க்கும் வேலைக்கு இப்படி செய்வாங்க.

அது போல நம் உணர்ச்சிகளை நிறுத்த நேர் எதிரான உணர்ச்சிகளை தூண்டலாம். அதே போல நேர் எதிரான எண்ணங்கள், செயல்களையும் தூண்டலாம்.


நெருப்போட உக்கிரத்தை குறைக்க வழிகளை பாருங்க!
மூச்சுப்பயிற்சி: மெதுவாக மூச்சை இழுத்து மெதுவாக விடவும். இதுக்கு ஆறு வினாடிகள் ஆகட்டும். மெதுவா ஓராயிரத்து ஒண்ணு, ஓராயிரத்து ரெண்டுன்னு ந்னு எண்ணுங்க. ஓராயிரத்து ஆறு வரைக்கும்! இப்படி மூச்சு விடும்போது இதயத்துடிப்பை கவனியுங்க. அதோட துடிப்பு வேகம் மெதுவாகிறதை கவனியுங்க.

பேரொளி: கொஞ்சம் கற்பனை செய்யுங்க. ஒரு பெரிய ஒளி வெள்ளம் வந்து உங்களை சூழ்ந்துக்குது! இதமான அழகான ஒளி! அது உங்க விரல்கள் வழியா வெளியே பாயுது!

உணர்வுகளின் இதமான அடுக்குகள்: அடிக்கடி உணர்ச்சிக்கலவையோடத்தான் இருக்கோம்ன்னு பார்த்தோம் இல்லையா? அதனால இப்ப கொந்தளிக்கிற உணர்வுகளுக்கு அடியில இதமான மென்மையான உணர்வுகள் இருக்கிறதை கவனியுங்க. இவற்றின் மேல கவனம் செலுத்தினா அவை வலுவடையும்.

பஞ்சு மிட்டாய்: இப்படி கற்பனை பண்னுங்க. உணர்சி சக்திகள் எல்லாம் சிலந்தி வலை போல மெல்லிய சரங்களா உங்களை சூழ்ந்திருக்கு. எல்லாத்தையும் பஞ்சா திரட்டி அமுக்கி பஞ்சு மிட்டாய் செய்து சுவைத்துப்பாருங்க!

சுருக்குதல்: உங்களோட உணர்வுக்கு ஒரு பெயர் கொடுங்க. அது எவ்வளவு பலமா இருக்குன்னு ஒரு மதிப்பெண்ணும் கொடுங்க. பூஜ்யம்ன்னா ஒண்ணுமே இல்லை. பத்துன்னா ரொம்ப ரொம்ப ரொம்ப பலமா இருக்கு. இப்ப இந்த உணர்வை ஒரு பலூன் மாதிரி கற்பனை செய்யுங்க. அதுக்கு ஏத்த வண்ணத்தில வடிவத்தில அது இருக்கட்டும். உதாரணமா நீங்க கோபமா இருக்கீங்க. அது சிவப்பு வண்ணத்தில முட்களோட ஒரு வீடு அளவுக்கு பெரிசா இருக்கு. சரியா? இப்ப மெதுவா மூச்சு இழுத்து இது மேல விடுங்க. இந்த மூச்சு பலூனோட சூட்டை தணிச்சு அளவை குறைக்கட்டும். அதே சமயம் அதோட வண்ணத்தையும் குறைக்கட்டும்!
இப்படி ஒரு அரை நிமிஷம் - முப்பது வினாடி - கற்பனை செய்யுங்க. இப்ப உணர்வுகள் எப்படி இருக்கு?

No comments:

Post a Comment