Wednesday 15 March 2017

குழந்தைகளின் மனக்கலக்கத்தை கையாள ... - 10


55. “ஆறை தாண்டி போகணும்ன்னா சில சமயம் அதில இறங்கி அமிழ்ந்து நடந்து போகறதுதான் வழி."
வளர்ந்த குழந்தைகளுக்கு அப்பப்ப ஆறுதல் படுத்தியாகணும். முதல்ல இந்த பிரச்சினை எப்படியும் முடிவுக்கு வந்துடும். கடைசியில காத்திருக்கறது மன உறுதி.

56. “இப்போதைக்கு இன்னும் ஒரே ஒரு ஸ்டெப் எடு!."
நீச்சல் கத்துக்க குளத்தில தள்ளிவிடறாப்போல சில சமயம், குறிப்பா புதுசா எதையாவது முயற்சி செய்யற குழந்தைக்கு கொஞ்சம் முன்னால தள்ளிவிடணும். உதாரணமா ஏணில ஏற தயங்கற குழந்தைக்கு பக்கத்தில பாதுகாப்பா நிக்கறது மட்டும் இல்லாம இன்னும் ஒரே ஒரு படி ஏறு பார்க்கலாம்ன்னு உற்சாகப்படுத்தணும். ஏறினபிறகு ஏதாவது பேசிவிட்டு இன்னும் ஒரே ஒரு... புரியுதில்லையா?

57. “ஒரு திகில் கதை சொல்லேன்!"
மனக்கலக்கத்தின் சில வெளிப்பாடுகள் சில ஹார்மோன்கள் சுரக்கறதால வரும். ஆனா இது அதிக நேரம் நிலைக்காது. திகில் கதை இதே ஹார்மோன்களை சுரக்க வைக்கும். அதனால அதிக நேரம் மனக்கலக்கம் நிலைக்காது! கதை கட்டறதுல கொஞ்சம் கற்பனை திறனும் வளரும்!

58. “இந்த மாதிரி நேரத்தில ___ என்ன செய்வார்?"

குழந்தைகளுக்கு ஒரு சூப்பர் ஹீரோ இருப்பாரே! அவர் யாருன்னு உங்களூக்கு தெரியும் இல்லை? ஹனுமார், பீமன், சோட்டா பீம் ... கற்பனை ஹீரோவை விட நிஜ வாழ்க்கை ஹீரோ இருந்தா இன்னும் நல்லது. குறிப்பிட்ட நெருக்கடில அவங்க என்ன செய்வாங்க? இதை நினைச்சுப்பாத்தா குழந்தைக்கு தானும் அப்படி செய்யத்தோணும். அது இப்ப பொருத்தமா இருக்கலாம்!

59. “நீ இப்ப எப்படி உணர்கிறேன்னு எனக்குத்தெரியும்.."
நிறைய நேரம் குழந்தைகளோட மனக்கலக்கத்தை ‘ஆமாம், அது இருக்கு’ ன்னு ஒத்துக்கொண்டாலேகூட போதும். யார்தான் அதுக்கு ஆளாகலை? அத்தோட காரணம் வேணும்ன்னா நமக்கு ‘சில்லி’ன்னு தோணலாம். ஆனா அது இருக்கு என்கிறது நிஜம்.

60. “உன் கவலை எவ்வளோ பெரிசு? அதை கொஞ்சம் சின்னதாக்க முடியுமான்னு பார்க்கலாம்."

மனக்கலக்கத்தை அளவிடறது நல்லது. எறும்பு சைஸ்ன்னா அதை பிடிச்சு ஒரு தீப்பெட்டில போட்டுடலாம். மரம் அளவுன்னா அதை கோடாலியால வெட்டிடலாம். இப்படி குழந்தையின் கற்பனையை பயன்படுத்தி மனக்கலக்கத்தை குறைக்கலாம்.

No comments:

Post a Comment