Tuesday 7 March 2017

குழந்தைகளின் மனக்கலக்கத்தை கையாள ... - 6

30. “உன் எண்ணங்கள் ஒவ்வொண்ணா விலகிப்போறதை பார்க்கலாமா?”

கலக்கமான எண்ணங்கள் ஒரு ரயில்வே ட்ரெய்ன் மாதிரி. அனேகமா எல்லா குழந்தைகளும் ட்ரெய்ன் வரதையும் நிக்கிறதையும் அப்புறம் கொஞ்ச நேரத்தில கிளம்பறதையும் பாத்திருப்பாங்க. கலக்கமான எண்ணங்களை ட்ரெய்னா உருவகிச்சா அதை கொஞ்சம் நேரத்தில கிளம்பிப்போக வைக்க முடியும்! கொஞ்சம் ‘கூ ஜிக்புக்’ சத்தம் உதவி பண்ணும்.
31. “பார், நா பெரிய மூச்சு எடுக்கப்போறேன்.”

சொல்லறதைவிட செஞ்சு காட்டறது எப்பவும் நல்லது. ஆழ்ந்த மூச்சு எடுத்துவிடறது எப்பவுமே மனசை லேசாக்கும். செஞ்சு காட்டி குழந்தைகளும் அதே போல செய்யத்தூண்டறது நல்லது. சின்னக்குழந்தையா இருந்தா அவங்களை தூக்கி மார்போட அணைச்சுக்கொண்டே இதை செய்யலாம். மார்பு சுருங்கி விரியற ‘ரிதம்’ சுலபமா புரியும்.

32. “உனக்கு நான் எப்படி உதவலாம்?”

ரிலாக்சேஷன் பயிற்சி பெற்ற குழந்தைகளுக்கு நாமா ஏதையாவது செய்யச்சொல்லாம அவங்களையே தேர்ந்தெடுக்கச்சொல்லலாம். உள்ளுணர்வு சரியாவே வழி காட்டும்.

33. “இந்த உணர்ச்சியும் நகந்துடும்..”

சில சமயம் குழந்தைகள் மனக்கலக்கம் முடியவே முடியாதோன்னு நினைப்பாங்க. அதை மொழுகி மூடாம, அதை தவிர்க்கவோ, மனக்கலக்கத்தை அழுத்தவோ செய்யாம இது எப்படியும் முடிஞ்சுடும்; கொஞ்சம் பொறுத்திருன்னு சொல்லலாம்.

34. “மன அழுத்தப்பந்தை நாம் ரெண்டு பேரும் அழுத்தலாம்.”

ஸ்க்வீசி பொம்மைகள் தெரிஞ்சிருக்கும். அதே போல அழுத்தக்கூடிய பந்துகள் இருக்கு. சாதாரண பந்துகள் கடினமா இருக்கும். ரொம்ப அழுத்தினா உடைஞ்சு போகும். ஆனா இதுகளை எவ்ளோ வேணா அழுத்தலாம். அது மேலே ஸ்மைலி மாதிரி படங்களும் இருக்கலாம். இதை அழுத்த மனசில இருக்கிற அழுத்தத்துக்கு ஒரு வடிகால் கிடைக்கும்.

35. “உன் பொம்மை ..... க்கு ஏதோ கவலை போல இருக்கே? நாம போய் அதுக்கு ஏதாவது டிப் கொடுக்கலாமா?”

கவலைக்கு ஒரு பொம்மை இருக்கட்டும். குழந்தைக்கு கவலை இருக்கறது தெரிஞ்சா அதுக்கும் கவலை வந்துடும்! குழந்தையும் அப்பா/ அம்மா வும் போய் அதுக்கு ஆலோசனை சொல்லலாம்! குழந்தை தான் பெற்ற பயிற்சிகளை சொல்லும்போது தானும் செய்யத்தோணும்!

36. “இது ரொம்ப கஷ்டம்ன்னு எனக்குத்தெரியும்.”

கொஞ்சம் கடினமான விஷயங்களை ‘அதெல்லாம் ஒண்ணும் கஷ்டமில்ல’ன்னு மொழுகறதை விட ’கஷ்டம்தான்; இருந்தாலும் முயற்சி பண்ணா செஞ்சுடலாம்’ன்னு சொல்லறது நல்லது. அவங்களை நீங்க புரிஞ்சுண்டது அவங்களுக்கு புரியும்.

No comments:

Post a Comment