Monday 13 March 2017

குழந்தைகளின் மனக்கலக்கத்தை கையாள ... - 8

43. “உன்னோட ஜாலி கோட்டைக்கு போலாமா?”

மனக்கலக்கத்தை வெகுவாக குறைக்கக்கூடியது கற்பனை. அமைதியா இருக்கும் போது கண்களை மூடி அவங்களுக்குன்னு ஒரு இடத்தை தயார் செய்துக்கச்சொல்லணும். அது ஒரு ரூமோ, கோட்டையோ, தோட்டமோ, பூங்காவோ எப்படி வேணுமானாலும் இருக்கட்டும். அங்கே அவங்களுக்கு பிடிச்ச பொருள் எல்லாம் இருக்கும். அங்கே எப்ப போனாலும் சந்தோஷம்தான்! இப்படி ஒரு கற்பனையை அடிக்கடி செய்யசொல்லி பின்னால மனக்கலக்கம் வரும்போது இந்த இடத்துக்கு போகச்சொல்லலாம். இப்படி போக முடியும் வரை அமைதியான நேரத்தில இந்த பயிற்சி தேவை.

44. “நான் உனக்கு என்ன செய்யட்டும்?”

மனக்கலக்கத்தில இருக்கற குழந்தைகிட்ட அவக்களுக்கு என்ன வேணும்ன்னு கேளுங்க. கொஞ்சம் தனிமை, ஒரு கட்டுப்பிடி வைத்தியம் அல்லது ஒரு முழு தீர்வுன்னு தேவை மாறுபடும்.

45. “உன்னோட உணர்ச்சிக்கு ஒரு கலர் அடிச்சா அது என்னவா இருக்கும்?”

மனக்கலக்கத்தில இருக்கிறவங்களை அவங்களோட உணர்ச்சியை விளக்கச்சொன்னா அனேகமா முடியாது. ஆனா குழந்தைகளை இப்படி கேட்டா அவங்க யோசிப்பாங்க. கலரை கற்பனை செய்யறது சுலபம்தானே? இப்படி செய்யறது கலக்கத்தை தணிக்கும். அவங்க ஒரு நிறத்தை சொன்னா அட, ஏன் அப்படி நினைக்கறேன்னு கேட்கலாம்!

46. “நா உன்னை கட்டிப்பிடிச்சுக்கறேன்.”

காலங்காலமா பயன்படற டெக்னிக்! கலக்கத்தில இருக்கற குழந்தைய கட்டிப்பிடிச்சுக்கறது, மடில உக்காத்தி வெச்சுக்கறது... பெற்றோரோட உடல் சம்பந்தம் வருவது அவங்களுக்கு ஆறுதலை கொடுக்கும். பாதுகாப்பா உணருவாங்க.

47. “முன்னே XYZ நடந்தப்ப நீ அதை தாண்டி ஜெயிக்கலை?”

முன்னே அனுபவிச்ச ஒரு வெற்றியை நினைவூட்டறது இப்போதைய முயற்சில முனைப்போட செயல்பட உதவி செய்யும்.

48. “இந்த சுவத்த கொஞ்சம் நகர்த்தி வைக்கலாமா, உதவி செய்யறியா?”

சுவத்தை தள்ளறது போல சில கடுமையான முயற்சிகள் இறுக்கத்தையும் மன உளைச்சலையும் குறைக்கும்.

No comments:

Post a Comment