Friday 17 March 2017

குழந்தைகளின் மனக்கலக்கத்தை கையாள ... -12

67. “உன் அபிமான __ பத்தி சொல்லேன்."
இப்படீஈஈ போக்குக்காட்டத்தான். சில சமயம் பிரச்சினைலேந்து கவனத்தை திருப்பறதே சரியா இருக்கும். எந்த குழந்தைக்குத்தான் அபிமான பொம்மை, கதை, நண்பன், காமிக் ஹீரோ இல்லை?

68. “உன்னால முடிஞ்ச வரைக்கும் நல்லா செய்; போதும்.”
எப்பவுமே எல்லாருக்குமே ஒரு நல்ல முயற்சி செய்யறத்தான் குறிக்கோளா இருக்கணும். ரிசல்ட் நம்மகிட்ட இல்லே. அதுதானே கீதையில சொன்னது. அதனால பர்ஃபெக்டா இப்படித்தான் பண்ணணும் என்கிற கான்செப்டை தூக்கி எறிங்க!

69. “இது என்னன்னு நீ நினைக்கிறே?"
சைக்காலஜில காக்னிடிவ் தெரபி சொல்லறது உணர்ச்சிகள் நடப்புகளால ஏற்படுவதில்லை. அவற்றை நாம எப்படி மனசில உள்வாங்கிக்கறோம் என்பதுதான் விஷயம். தப்பா உள்வாங்கிக்காம இருந்தாலே பல பிரச்சினைகள் தீர்ந்துடும்!

70. “கடின முயற்சி திறமையை வெல்லக்கூடும்."
கச்சிதமா செய்யறவங்க எப்பவும் தன்னை மத்தவங்களோட ஒப்பிட்டுக்கொண்டே இருக்காங்க. இவள் என்னை விட அழகு; இவன் என்னைவிட வலிமையானவன். குழந்தை இந்த ரீதியில் யோசிச்சு நான் போட்டி போட மாட்டேன்; இவங்க எல்லாரும் என்னைவிட திறமைசாலிங்கன்னு சொல்லக்கூடும். திறமை என்கிறது ஒரு பக்கம் இருக்கட்டும்; கடின உழைப்புக்கு மாற்றே கிடையாதுன்னு சொல்லுங்க!

71. “நீ எப்படி இருக்கியோ அப்படியே உன்னை எனக்குப்பிடிக்கும்."
அப்பப்ப இப்படி ஒரு உறுதிப்படுத்தல் வேண்டி இருக்கலாம். அம்மா. அப்பா எதிர்பார்ப்புக்கு நான் வரலையே. என்னை அவங்களுக்கு பிடிக்குமோ என்கிற மனப்பான்மை போகணும்.

72. “எப்பவுமே இப்படி இருக்க மாட்டே!"
இப்ப மனக்கலக்கம் இருக்குதான். இப்படியே வாழ்நாள் முழுக்க இருப்போமா என்ன? மனக்கலக்கம் அப்பப்ப வரும் போகும். என்னைக்கோ ஒரு நாள் காணாமலும் போகும். இதை உறுதியா சொல்லணும்.


நிறைந்தது!

No comments:

Post a Comment