Wednesday 8 March 2017

குழந்தைகளின் மனக்கலக்கத்தை கையாள ... - 7

37. “உன் வாசனை நன்பன் எங்கே?”

சில வாசனைகள் மனசை இதமா வருடி தளர்த்திக்கொடுக்கும். அந்த வாசனை இருக்கற ஏதாவது ஒரு பொருள் - ம்ம்ம் மைசூர் சாண்டல் ஸோப்?- கைவசம் இருக்கட்டும். மன இறுக்கம் அதிகமாகும் போது உதவும். சந்தனம் மாதிரியே ஜாதி பத்ரி, மல்லிகை, லாவண்டர். Chamomile. கமமைல் டீ மனக்கலக்கத்தை குறைக்க பிரசித்தி பெற்றது!

38. “அதப்பத்தி சொல்லேன்.”

குழந்தையை இடைமறிச்சு பேசாம முழுக்க தன்னை தொந்திரவு செய்யறது என்னன்னு சொல்லட்டும். அது அவங்களுக்கே ஒரு தெளிவை கொடுக்கும். அப்படி சொல்லும் போது அவங்களுக்கே என்ன செய்யணும் தோணினாலும் ஆச்சரியப்படறதுக்கு இல்லே.

39. “நீ அவ்வளோ தைரியசாலி!”

குழந்தை அந்த நிலைமையை சமாளிக்க முடியும்ன்னு ஒரு தைரியம் வர இப்படி சொல்லுவோம்.

40. “மனசு சாந்தியாக எந்த உத்தியை இப்ப கையாளபோறே?”

ஒவ்வொரு மனக்கலக்கம் தரும் பதட்ட நிலையும் வித்தியாசமானது. அதனால தகுந்த உத்தின்னு குழந்தைக்கு தோணுவதை தேர்ந்தெடுக்கட்டும். ஒரு வேளை அப்படி முடியலைன்னா நாம் செய்வோம்.

41. “நாம் ரெண்டு பேரும் சேந்து இதை சமாளிப்போம்.”

அச்சுறுத்தும் நிலைமை முடியும் வரை நாம கூடவே உறுதுணையா இருந்தா அது அவங்களை திடப்படுத்தும்.

42. “அந்த பயமுறுத்தற விஷயம் பத்தி வேற என்ன உனக்குத்தெரியும்?”

ஒரு விஷயம் அவங்களை அடிக்கடி அச்சுறுத்துமானா, அவங்க அமைதியா இருக்கும்போது அதைப்பத்தி கொஞ்சம் கூட்டு ஆராய்ச்சி செய்யலாம். அதைப்பத்தி பல விஷயங்களை கத்துக்கலாம். அதைப்பத்திய மனக்கலக்கம் வரும்போது இதை நினைவூட்டினால் அவங்க இன்னும் கொஞ்சம் திடமாவாங்க.
உதாரணமா கம்பளிப்பூச்சி பத்தி பயம்ன்னா அதைப்பத்தி படிச்சு அதுவேதான் வண்ணத்துப்பூச்சி ஆகிறதுன்னு புரிஞ்சப்பறம் அதை நினைவூட்டினா பயம்போய்விடலாம்.

No comments:

Post a Comment