Tuesday 7 February 2017

10. மத்தவங்க உணர்வுகளை மதிச்சு ஒத்துக்கொள்ளுங்க.

10. மத்தவங்க உணர்வுகளை மதிச்சு ஒத்துக்கொள்ளுங்க.
அலுவலகத்துக்குள்ள போய்கிட்டு இருக்கீங்க. சக ஊழியர் ஒத்தரை கடந்து போறீங்க. அவர் கொஞ்சம் விட்டா அழுதுடுவார் போலிருக்கு. ஏதாவது பிரச்சினையா ந்னு கேக்கறீங்க. “வீட்டுல பிரச்சினை!”  “ ! சரி சரி, வேலையில் இறங்குங்க. சரியாயிடும்” ந்னு ஒரு பொன் மொழியை உதிர்த்துட்டு போய்கிட்டே இருக்கீங்க. மீதி நாள் முழுதும் அவங்க உங்களை தவிர்த்துகிட்டே இருக்காங்க.

ஏன்யா, மூஞ்சிய பாத்தா ஏதோ பிரச்சினைன்னு தெரியலை? இதுக்கு ஒரு கேள்வியா? அப்புறம் என்ன வேலை எல்லாத்தையும் சரி பண்ணிடும்? டிவோர்ஸ் ஆகிற நிலையை அது தவிர்த்துடுமா? கர்ர்ர்ர்!


மாறா ஆதுரத்தோட “நீங்க கஷ்டத்தில இருக்கீங்க. நான் செய்யக்கூடியது ஏதாவது இருக்கா?” ந்னு கேட்டு இருந்தா அது சரியா இருக்கும். நமக்கு அது கொஞ்சம் துன்பத்தை ஏற்படுத்துமானாலும் பரவாயில்லைன்னு மத்தவங்களோட துன்பத்தில பங்கெடுக்கணும். பெரிசா ஒண்ணும் வேணாம். அவங்க கஷ்டத்தில இருக்காங்கன்னு அக்னாலெட்ஜ் பண்ணா போதும். அவங்களோட உணர்ச்சி தப்புன்னு சொல்லவோ மாத்த முயற்சிக்கவோ இது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லைன்னு சொல்லவோ முயற்சிக்க வேணாம். அவரவருக்கு அவரவர் கவலை. இன்னைக்கு இப்போதான் டிவில செய்திகள் பார்த்தேன். சென்னை புயலுக்கு பிறகு ஒரு பெண்மணி சொல்லறார், “காஷ் இல்லாம கூட இருந்துடலாம். செல்ஃபோன் இல்லாம இருக்க முடியலை!” இதை கேட்டு எனக்கு சிரிக்கறதா அழறதான்னு தெரியலை. இருக்கட்டும். அது என் தனிப்பட்ட தேர்வு. அந்த அம்மணிக்கு அது நிஜமான பிரச்சினை. அதை தள்ளிடக்கூடாது; மதிக்கணும். மேலே சொன்ன உதாரணத்தில “அவங்க சொன்னதை திருப்பிச்சொல்லி இருந்தாக்கூட போதும். அது அவங்களுக்கு பிரச்சினையை கொடுக்கறது ந்னு ஒத்துக்கொண்டா போதும். அதைப்பத்தி ஒரு தீர்மானத்துக்கும் வரத்தேவையில்லை. நம்ம சொந்த கருத்து எல்லாம் நம்மோடவே இருக்கட்டும். இப்படிச்செய்ய அவங்களை ஒரு பேலன்ஸுக்கு கொண்டு வருவோம்.

No comments:

Post a Comment