Wednesday 8 February 2017

11. மற்றவரோட உணர்ச்சிகள், நிலை …. நிற்க அதற்குத்தக!

11. மற்றவரோட உணர்ச்சிகள், நிலை …. நிற்க அதற்குத்தக!
எத்தனை முறை நாம செல்ஃபோன் கம்பனி கஸ்டமர் சர்வீஸுக்கு ஃபோன் பண்ணி இருப்போம்! (நான் ஒரு தரம் கூட செஞ்சதில்லை) நாம் நிதானமா அமைதியான குரல்ல நம்ம புகாரை சொன்னா அவங்க சரியா பதில் சொல்லுவாங்க, வேலை முடிஞ்சுடும்ன்னு நினைப்போம். சரிதான். அப்படி ஆக நிறைய வாய்ப்பு இருக்கு. ஆனா அதே நாம் வேற விஷயத்தால செம கடுப்புல இருந்தா? இருக்கற வேலை போறாதுன்னு இவன் வேற தப்பான பில்லை அனுப்பறான்! என்ன வேலை செய்யறாங்கன்னு திட்டிகிட்டே இருந்தா, நம்ம கால் வேற ஹோல்ட்லேயே இருக்கு. இப்ப நாம இன்னும் எரிச்சலடைஞ்சுட்டோம். ஒரு வழியா எதிர்முனையில் ஆசாமி வரார். நாம் திட்டலை; ஆனா எரிச்சலோட நம்ம புகாரை சொல்லறோம்.

நல்ல சர்வீஸ் கொடுக்கற ஆசாமியா இருந்தா நாம கத்தினாக்கூட அனாவசியமா விஷயத்தை வளர்க்காம “சாரி சார், தகவலை கொடுங்க; உடனே சரி செஞ்சுடறேன்!” ந்னு சமாதானப்படுத்துவார். தகவல் கொடுத்ததும் “சரி சார், இத்தனை நேரத்துக்குள்ள சரி செஞ்சுடறேன்”னு சொல்லி நம்மை அமைதியா ஃபோனை வைக்க வைப்பார். நாமளும் “பரவாயில்லையே! பில் அனுப்பறதுல சொதப்பினாலும் கஸ்டமர் சர்வீஸ் பரவாயில்லை” ன்னு நினைச்சுண்டே அடுத்த வேலையை பார்க்கப்போவோம். இந்த சர்வீஸ் ஆசாமிக்கு நிறையவே ஈக்யூ இருக்கு! அந்த கம்பனிக்கு இவர் விலை மதிக்க முடியாத பெரிய சொத்து!
அவர் செஞ்சதை பாருங்க. நாம் சொன்னதை காது கொடுத்துக்கேட்டார். நம்ம எரிச்சலை யூகிச்சுக்கொண்டார். நம்ம இடத்தில அவரை வெச்சுப்பாத்தார். நம்மோட உணர்ச்சிகள் அவருக்கு புரிஞ்சது. அதுக்கு தக்க பதிலை கொடுத்தார். இந்த தக்க பதில் - இதான் சமாசாரம். சும்மா மத்தவங்க உணர்ச்சிகளை நாமும் பிரதிபலிக்கறது சரியா இருக்காது. நாம எரிச்சல்பட்டோம்ன்னா அவரும் எரிச்சலோட பதில் சொல்ல ஆரம்பிச்சு இருந்தா என்ன ஆகியிருக்கும்?

தக்க எதிர்வினை எப்பவும் நாம் மத்தவங்களோட உணர்ச்சிகளை புரிஞ்சுக்கறோம், அது முக்கியம்ன்னு நினைக்கிறோம் என்பதை சொல்லும்.

இதுக்கு பயிற்சியா ரெண்டு மூணு உணர்ச்சிகரமான நிகழ்வுகளை யோசிச்சு பாருங்க. அதுல உங்களைத்தவிர இன்னும் ஒருத்தராவது இருக்கணும். நிகழ்வில மறைவான விஷயம் எதுவும் இருக்கக்கூடாது. என்ன நடந்தது என்கிறது வெளிப்படையா இருக்கணும்.
அந்த இன்னொருத்தர் என்ன செஞ்சார்? அவரோட செயல் உங்களுக்கு ஆறுதல் கொடுத்ததா இல்லை உணர்ச்சியை இன்னும் அதிகமாக்கியதா? நீங்க அவங்க இடத்தில என்ன செஞ்சு இருப்பீங்க?


இப்ப மத்தவங்களோட உணர்ச்சிக்கு தக்கபடி நாம் என்ன செய்ய முடியும்? ஒரு சான்ஸ் வர காத்திருங்க. வீட்டிலேயோ. அலுவலகத்திலேயோ… நமக்கு கொஞ்சம் க்ளோஸானவங்க. நம்ம பயிற்சியா செய்ய வேண்டியது அவங்களோட மூடை பாத்து அதுக்கு தகுந்தபடி கொஞ்சம் உதவியா ஏதாவது செய்யறது. நேரமில்லாம பறந்துகிட்டு இருக்கறவங்களுக்கு அவங்க வேலையில கொஞ்சம் உதவி செய்யறது. வீட்டு வேலையில இன்னும் கொஞ்சம் அதிகமா பகிர்ந்துக்கிறது… யோசிச்சா நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். இதை செய்ய அவங்க “அட. நம்ம மேல இவனுக்கு அக்கறை இருக்கு!”ன்னு நினைப்பாங்க. அது நல்லது. உறவை பலப்படுத்தும்.

No comments:

Post a Comment