Thursday 2 February 2017

8. கோபம்

8. கோபம்
யார் வேணும்னாலும் கோபப்படலாம்; அது ரொம்ப சுலபம். ஆனா சரியான நபர்கிட்ட சரியான அளவு சரியான நேரத்தில சரியான நோக்கத்தோட கோபப்படறது- அது சுலபமே இல்லை. இப்படிச்சொன்னவர் அரிஸ்டாட்டில். க்ரேக்க தத்துவ ஞானி. ரத்தினச்சுருக்கமா எமோஷனல்இண்டலிஜென்ஸ் பத்தி சொல்லிட்டார்! நம் உணர்வுகள் உறவுகள் பத்தி இதைவிட ஆழ்ந்தும் தெளிவாவும் யாரும் சொல்ல முடியாது! இது கைவரப்பட்டுட்டால் உங்க உசாநு பயணம் வெற்றின்னு எடுத்துக்கலாம்!

கோபம் ஒரு காரணத்துக்காகத்தான் வரது. அதை அமுக்கறதும் நல்லதில்லை. உதாசீனம் செய்யறதும் சரியில்லை.அதை சரியா திட்டமிட்டு வெளிப்படுத்தினா நல்லது நடக்கும்; உங்க உறவுகளும் மேம்படும். நிஜமா!

ஹாக்கி, புட்பால், பாஸ்கெட் பால் - இப்படி பல விளையாட்டுகளையும் எடுத்துக்கோங்களேன். இடைவேளையில கோச் என்ன செய்வார். கோச்சுப்பார்! ஆமா!
நேரடியா விஷயத்துக்கு வருவார். நேரம் குறைவு இல்ல? “ஏண்டா முட்டாள் பந்தை ஏண்டா தடவி கொடுத்துண்டு இருக்கே?” ன்னு ஆரம்பிச்சு படபடன்னு பலரையும் ஒரு பிடி பிடிச்சுட்டு ரைட் இப்ப இப்படி செய்யுங்கன்னு சில விஷயங்களை குறிப்பா சொல்லுவார். டீம் முழுக்க புத்துணர்ச்சியோட நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்த தயாரா வந்து நிக்கும். கோச் தன் உணர்ச்சிகளை டீமை திருப்பி ஆட்டத்துக்கு தயார் செய்ய பயன்படுத்தினார். கோபத்தை சரியா வெளிப்படுத்தினா நிலைமையோட தீவிரம் புரியும்; நீங்க அதுக்கு கொடுக்கிற முக்கியத்துவம் புரியும்.

இதுவே ரொம்ப அதிகமாகவோ அல்லது தப்பான நேரத்திலோ வெளிப்படுத்திக்கொண்டே இருந்தா “ ஆமா இவன் எப்பவும் இப்படித்தான் சொல்லிண்டு இருப்பான்”னு தோணிடும். சீரியஸா எடுத்துக்க மாட்டாங்க.

கோபத்தை இப்படி மடை திருப்பி பயன்படுத்தறதுக்கு கொஞ்சம் நேரமாகும். அடிக்கடி பயிற்சி கிடைக்காது இல்லையா? ஆமா, அடிக்கடி கோபப்படுகிற நிலமை வராமலே இருக்கட்டும்! :-)

உங்களோட சுய மேலாண்மை திறனை இதுக்கு பயபடுத்தணும். எதெல்லாம் நம்மை கோபப்படுத்துது? லேசான எரிச்சல் முதல் படு பயங்கர கோபம் வரை. எல்லாத்தையும் சில வார்த்தைகளிலே எழுதுங்க. அடுத்து இதுல எங்கே எப்போ எவ்வளவு கோபத்தை வெளிப்படுத்தலாம்ன்னு உங்க கருத்தையும் எழுதுங்க. இந்த தேர்வுகளை செய்யும் போது உங்க சமூக விழிப்புணர்வையும் செயலுக்கு கொண்டு வந்து யார் யார் இதுக்கு எப்படி எதிர்வினை செய்வாங்கன்னு யோசியுங்க.

வலுவான உறவுக்கு நேர்மை அவசியம். உங்களுக்கும் சரி உங்களை சார்ந்தவர்களுக்கும் சரி அது அவசியம். இது சில சமயம் கோபத்தை வெளிப்படுத்துவதா இருந்தா அதை தவிர்க்க நினைக்கக்கூடாது. சரியான படிக்கு கையாண்டா, நாம் தப்பு பண்ணோம்; அதுக்குத்தானே கோவிச்சுண்டார். இனி தப்பு செய்யக்கூடாது!” ந்னு மத்தவங்க மனசில தோணணும்!


No comments:

Post a Comment