Wednesday 1 February 2017

7. திறந்த கதவு…

7. திறந்த கதவு…
நீங்க ஒரு நிறுவனத்தில மேலாளரா? இந்த பாலிசி உங்களுக்கு சரி வருமான்னு பாருங்க. உங்க கீழ வேலை செய்யற யாரும் எப்போ வேணுமானாலும் உங்க ரூமில நுழையலாம். அவங்க பிரச்சினைகளை விவாதிக்கலாம். கருத்துக்களை சொல்லலாம்.

இப்படி இருக்கறதுல சௌகரியம் என்னன்னா யாரும் என் கருத்துக்களை கேக்கறதில்ல; பல விஷயங்கள் நிலுவையிலேயே இருக்கு; நடுல மேனேஜ் செய்யறவஞ்க பல விஷயங்களை அமுக்கிடறாங்க – இப்படி பல புகார்கள் எழ வாய்ப்பு இராது.

பிரச்சினை? அட எல்லாத்துக்கும் இரண்டு பக்கம் இருக்குமில்ல? பிரச்சினை என்னன்னா உங்க நேரம் வெகுவா பறிக்கப்படும். அதுக்கு நீங்க தயாரா இருக்கணும். அப்புறம் மேனேஜ்மெண்ட்ல நடுவில இருக்கிறவங்க மனசு புண் படலாம். “பாரு அவன் சொன்ன விஷயத்துல நடவடிக்கை எடுக்கறதுக்குள்ள மேலே போட்டுக்கொடுத்துட்டான்” என்கிற ரீதியில பல மனத்தாங்கல்கள் வரும். இதை எல்லாம் திறமையா கையாளணும். கீஈஈழே இருக்கிறவர் நேரடியா புகார் கொடுத்தாலும் அதை கேட்டுக்கொண்டு, “சரி,உனக்கு மேலே இருக்கறவர்கிட்ட இதப்பத்தி பேசினியா? இல்லைன்னா போய் பேசு” ன்னு சொல்லி அனுப்பணும். அதே சமயம் அதை தொடர்ந்து கண்காணிக்கணும்.

இப்படிச் செய்ய உங்களுக்கும் உங்க கீழ வேலை செய்யறவங்களுக்கும் உறவுகள் மேம்படும். அவங்களைப்பத்தி நீங்க இன்னும் அதிகமா தெரிஞ்சுக்க முடியும். அவங்களுக்கு அவங்களையும் நிறுவனம் ஒரு பொருட்டா நினைக்குதுன்னு ஒரு பெருமிதம் இருக்கும்.

சாமர்த்தியமா கையாண்டா நல்ல பலன் கொடுக்கக்கூடிய விஷயம் இது!


No comments:

Post a Comment