Thursday 9 February 2017

12. அக்கறை இருப்பதை காட்டுங்க!

12. அக்கறை இருப்பதை காட்டுங்க!

ஒருத்தர் ஒரு நாள் காலை அரைதூக்கத்தில ஆஃபீஸுக்குள்ள நுழைஞ்சார். முந்தைய இரவு வேலை முடிச்சு வீடு திரும்ப மணி ரெண்டு. கடுமையான அவசரமான வேலை. செஞ்சே ஆகணும் என்கிற நிலமையில் வேலையை முடிச்சுட்டே வீட்டுக்குப்போனார். இன்னைக்கு காலையில லீவு போட்டுட்டலாமான்னு யோசிச்சு இல்லை இன்னும் தொடர வேண்டிய வேலைகள் நிறைய இருக்கேன்னு கொஞ்சமே தாமதம் ஆனாலும் ஆஃபீஸ் வந்தாச்சு. அவரோட ரூம்ல நுழைஞ்சு உக்காந்தா மேசை மேல ஒரு கார்டும் அவருக்கு ரொம்ப ரொம்ம்ம்ம்ம்ப பிடிச்ச ஃப்ரெஷ் ஸ்வீட்டும்! விசாரிச்சா பாஸ் வழக்கமான நேரத்துக்கே ஆஃபீஸ் வந்தாச்சுன்னு தகவல். இவர் அப்படியே நெகிழ்ந்து போயிட்டார். பாஸ் வீட்டையும் அலுவலகத்தையும் சேத்து மேனேஜ் பண்ணற பெண்மணி. அவர் இரவு செஞ்ச வேலையை தெரிஞ்சுகொண்டு காலையில் கொஞ்சம் நேரமெடுத்து அவருக்கு பிடிச்ச ஸ்வீட்டை வாங்கி… அடடா! என் பாஸ் போல உண்டா ந்னு கண்ணீர் வரவெச்ச தருணம்!
சின்ன சின்ன விஷயங்கள்தான். ஆனா சமயத்தில எவ்வளவு பெரிய விளைவை கொடுக்குது! வேலை செய்யறவங்களுக்கு எவ்வளவு ஒரு உற்சாகம் கொடுத்து விஸ்வாசத்தை வளர்கிற விஷயம்!

எத்தனை பேர் நம்மை சுத்தி பல வேலைகளை நேர்த்தியா செஞ்சு கொண்டு இருக்காங்க! ஓட்டல்ல சாப்ட்டுட்டு இன்னைக்கு பொங்கல் பிரமாதம்ன்னு எப்பவாவது முதலாளிகிட்டயாவது சொல்லி இருக்கோமா? மோட்டார் சைக்கிள் பழுது நீக்கி சர்வீஸ் செய்து கொடுத்த மெகானிக்கிட்ட நல்லா செஞ்சு இருக்கீங்கன்னு சொல்லி இருக்கோமா?
ஒரு நல்ல விஷயத்தை நாம பாராட்டறோம்ன்னா மனசுக்குள்ள வெச்சுக்காதீங்க. வெளிப்படையா சொல்லுங்க. கேட்ட ஆசாமி அன்னைக்கு உற்சாகமா இருப்பார்.

உங்க அக்கறையை வெளிப்படுத்துங்க!

No comments:

Post a Comment