Thursday 1 December 2016

மன இறுக்கம்

இதை எழுதறப்பத்தான் ஒரு வாசகம் படிச்சது ரொம்ப பிடிச்சுப்போய் கூகுள் ப்ளஸ்ல ஷேர் பண்ணேன்.
A THOUGHT FOR TODAY:
The measure of a man's real character is what he would do if he knew he would never be found out. -Thomas Babington Macaulay, author and statesman (25 Oct 1800-1859) 

யாரும் பார்க்காதப்ப செய்யற காரியம் வெளியே தெரியாதுன்னு இருக்கறப்ப யாரும் எதுவும் செய்வாங்க. ஆனா நாம் செய்யற காரியம் பலதும் சிலர்/ பலர் முன்னிலையிலேதான் நடக்குது. இது நமக்கு ஒரு மன இறுக்கம் - ஸ்ட்ரெஸ். எது நம்மை மன இறுக்கத்துக்கு ஆளாக்கும் என்கிற பட்டியல் நாளுக்கு நாள் கூடிகிட்டேத்தான் போகும். இது அதிகமாகி அதிகமாகி ‘யப்பா, இனிமே நம்மால் முடியாது!” ந்னு கையை தூக்கறப்ப இன்னும் நாலு காரணிகள் வந்து சேரும். நடப்பில் கிடைக்கிற பல நவீன உபகரணங்கள் ஒரு பிரயோசனமும் இல்லை. மாறா அவை வாழ்க்கையை இன்னும் வேகமாக்கி இன்னும் மன இறுக்கத்தை சேர்க்குது. பலருக்கும் இதோ மன இறுக்கம் வரப்போறது என்பது தெரிஞ்சுதான் இருக்கு. அதுக்கான சில எச்சரிக்கை மணிகள் அடிக்கும். ஆனா அதுக்கு நாம செவி சாய்க்கிறோமா?

மன இறுக்கத்தை ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்க கத்துக்கறது மிக நல்ல விஷயம். மனசிலேயும் உடம்பிலேயும் அதனால ஏற்படுகிற விளைவுகளை உன்னிப்பா பார்க்க கத்துண்டா போதும். நாமோ அது பலமா கத்தினாக்கூட கண்டுக்க மாட்டேங்கிறோம்!
வயிறு கடமுடான்னா பதட்டமும் மனக்கலக்கமும் உடலை தாக்குது, தாங்க முடியலைன்னு பொருள். அஜீரணமும் சோர்வும் ஓய்வு தேவைன்னு சொல்லுது. பிரச்சினை என்னன்னா இப்படி வெளிப்படறது ஒவ்வொத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கலாம். மன இறுக்கம் உங்களுக்கு அஜீரணத்தை கொடுத்தா இன்னொருத்தருக்கு தலைவலியை கொடுக்கலாம். இன்னொருத்தருக்கு வாய்ப்புண். பிறிதொருவருக்கு முதுகு வலி.


இப்படி கிடைக்கற சிக்னலை கவனிச்சு அதுக்கு தகுந்தபடி நாம செயல்படணும். சுவரை வைத்துதானே சித்திரம் எழுதணும்? உடம்பை தெரிஞ்சே கெடுத்துக்கொண்டு இருக்கறதுல அர்த்தம் இல்லை. மீள முடியாத அளவுக்கு சேதம் ஆக விடக்கூடாது

No comments:

Post a Comment