Thursday 12 January 2017

10. சினிமா சினிமா சினிமா!

10. சினிமா சினிமா சினிமா!
திரைப்படங்கள் வாழ்க்கையின் ஒரு பக்கத்தைத்தானே பிரதிபலிக்குது? அவை எதை ஃபோகஸ் செய்யுது என்கிறதெல்லாம் கொஞ்சம் மோசமா இருந்தாலும் சரியான பார்வை இருந்தா அதிலேந்தும் கொஞ்சம் பாடம் நாம் கத்துக்க முடியும். யார் எதை எப்படி கையாளுகிறாங்க, அதனுடைய விளைவு என்னன்னு பார்த்துடலாம். அதனால எப்படி நடந்துக்கலாம் எப்படி நடந்துக்கக்கூடாதுன்னும் கத்துக்கலாம். மஹா பாரதமும் ராமாயணமும் அதைத்தானே சொல்ல வருது? துரியோதனன் எப்படி இருந்தான் அவனுக்கு என்ன ஆச்சு? கர்ணன் எப்படி இருந்தான் அவனுக்கு என்ன ஆச்சு? ம்ம்ம்ம்… புரியுதில்ல?
சுமாரா 60 களில முன்னே பின்னே வந்த படங்கள் எதுவும் ஒரு படிப்பினை இல்லாம இருக்காது. அப்புறம்தான் வெறும் ‘ஜனரஞ்சகமான’ படங்கள்ன்னு வந்து இப்ப மோசமான முன்னுதாரண படங்களா வந்துகிட்டு இருக்கு. :-(

இருந்தாலும் இப்ப நிறைய நடிக நடிகையர்கள் திரையில் உணர்ச்சிகளை நல்லா காட்டறாங்க. இதை சரியா பார்த்தா உணர்ச்சிகள், உடல் மொழி பத்தி இன்னும் கொஞ்சம் கத்துக்கலாம். திரையில பார்க்கிற ஆசாமியா இருந்தா என்ன, நேரடியா பார்க்கிற ஆசாமியா இருந்தா என்ன? அவரோட உணர்ச்சிகளை சரியா புரிஞ்சுக்கறதே பாடம். நாம இந்த திரைக்கதையை பொருத்த வரை மூணாவது ஆசாமி. திரையில் நடக்கிறதுக்கு நமக்கு ஒரு தொடர்பும் இல்லை. அதனால நாம இதுல ‘இன்வால்வ்’ ஆக தேவையில்ல. அதனால எந்த ‘ரிஸ்க்’ உம் இல்லாம நாம மக்களை பார்த்து அவங்க உணர்ச்சிகளை புரிஞ்சுக்க முயற்சி செய்யலாம்.

பயிற்சியா ஒரு குடும்பக்கதையை அடிப்படையா கொண்ட ஒரு திரைப்படத்தை - பழைய படமானாலும் வாய்ப்பு அதிகம்- தேர்ந்தெடுத்துப்பாருங்க. பாத்திரங்களிடையே ஊடாடும் உணர்ச்சிகள், உறவுகள், சண்டை சச்சரவுகள்; அவர்களோட உடல் மொழி இதெல்லாம் கவனிச்சு அவங்க ஒவ்வொருத்தரும் எப்படி உணருகிறாங்க, எப்படி பிரச்சினைகளை கையாளுகிறாங்கன்னு பாருங்க. அந்த பாத்திரம் மேலும் மேலும் வளர்த்தெடுக்கிற போது தேவையானா ரீவைண்ட் பண்ணி முன்னே வந்த சீன்களில எந்த க்ளுவாவது கவனிக்கத்தவறிட்டோமோன்னு கவனியுங்க.

சரியானபடி கையாண்டா சினிமா பார்க்கிறது நல்ல பயிற்சியா அமைய முடியும்.

ஆனா சீரியல் அப்படி இல்ல. சினிமா மிஞ்சி மிஞ்சி போனா ரெண்டரை மணி நேரம். சீரியல் தினசரி அதே உணர்ச்சிகளை காட்டி காட்டி நம்மையும் அதே மாதிரி ஆக்கிடும் ஆபத்து இருக்கு! ‘உன்ன என்ன பண்ணறேன் பாருடி’ ந்னு தினசரி கேட்டுக்கேட்டு நாமும் அதையே மனசுக்குள்ள சொல்ல ஆரம்பிச்சுடுவோம். கவனம் இருக்கட்டும்!

No comments:

Post a Comment