Wednesday 4 January 2017

6. சமூக கூடுதல்களுக்கு திட்டமிடுங்கள்.

6. சமூக கூடுதல்களுக்கு திட்டமிடுங்கள்.
நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு பார்டி திட்டமிட்டு இருக்காங்க. வரவங்க ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு உணவுப்பொருள் கொண்டு வரணும்ன்னு ஏற்பாடு. நாம சிப்ஸ் கொண்டு போகணும். வேலை மும்முரத்தில மறந்துட்டோம். ஏன், பார்ட்டி இருக்குன்னு ஆஃபீஸ்ல ஒத்தர் நினைவூட்டித்தான் அடடான்னு கிளம்பி வந்தோம். வந்த பிறகுதான் சிப்ஸ் வாங்க மறந்தது நினைவுக்கு வரது. சிப்ஸ் இல்லாம சாப்பிடற எல்லாரும் நம்மை கலாய்க்கிறாங்க. ஹும்! நேரம்.
பார்டி முடிஞ்சு கிளம்பினப்பிறகுதான் ‘அடடா! சங்கர்கிட்ட ஒரு முக்கியமான சமாசாரம் பத்தி கருத்து கேட்கணும்ன்னு நினைச்சுகிட்டு இருந்தோமே! மறந்து போச்சு. ஆமா ராமு ஏதோ வருத்தமா இருந்தாப்போல இருந்துதே? விசாரிச்சு இருக்கலாமோ? எப்படி நடக்கும்? ஆஃபீஸ்ல வீட்டைப்பத்தி நினைக்கிறதும் வீட்டில ஆஃபீஸ் பத்தி நினைக்கிறதும்தானே நம்ம பழக்கம்?

இந்த பார்டிக்கு போகணும்ன்னு நினைச்சோம் ஆனா அதுக்கு திட்டம் போட்டோமா? என்ன பெரிய திட்டம்ன்னு கேட்கறிங்களா? திட்டம் இல்லாம செஞ்சது எங்கே கொண்டு விட்டதுன்னு பார்த்தோமில்ல? தினமும் காலை எழுந்த பிறகு கொஞ்ச நேரம் - கொஞ்சமே கொஞ்சம் - இதைப்பத்தி யோசிச்சு இருந்தாக்கூட போதும். ஆஃபீஸ் போறப்பவோ மதிய உணவு இடைவேளை போதோ சிப்ஸை வாங்கி இருப்போம். சங்கர்கிட்ட பேசணும்ன்னு அன்னைக்கு காலை நினைவூட்டிக்கொண்டு இருந்தா அதை நடத்தி இருக்கும் வாய்ப்பு அதிகம். இப்படி ஒரு திட்டத்தோட போகிற இடத்துக்கு போனால் நம்மோட மனத்தையும் மூளையையும் புத்துணர்ச்சியோட வெச்சிருக்கும். அந்த நேரத்தில அங்கே வாழறதை கடைபிடிப்போம்! கடந்த காலத்திலேயோ எதிர்காலத்திலேயோ இல்லாம நிகழ்காலத்தில வாழ்ந்திருப்போம்.

அடுத்த முறை இந்த மாதிரி ஒரு அழைப்பிதழ் கைக்கு வரும்போதே யார் யார் வருவாங்க, அவங்ககிட்ட நாம் பேச ஏதாவது இருக்கா, செய்ய ஏதாவது இருக்கான்னு யோசிச்சு குரிப்பு எழுதுங்க. அதை கையோட வெச்சுக்குங்க.


இப்படி ஒழுங்கா திட்டம் போட்டு இருந்தா சரியான நேரத்துக்கு பார்டிக்கு போயிருப்போம். சிப்ஸ் வாங்கிக்கொண்டு போயிருப்போம். சங்கரோட…. அதோ அங்கே இருக்காரே! போய் பேசி இருப்போம். மனசு குப்பையில்லாம சுத்தமா இருக்குமில்லையா? அதனால ராமு ஒரு மாதிரி இருக்கானேன்னு மனசுல அப்பவே தோணி இருக்கும். கிட்ட போய் விசாரிச்சு ஆறுதலா ரெண்டு வார்த்தை சொல்லி இருப்போம். மொத்தத்தில குற்றவுணர்ச்சியோட சங்கடத்தோட ஒரு பார்டில இருக்காம மகிழ்ச்சியோட இருந்திருப்போம்.

No comments:

Post a Comment