Monday 16 January 2017

13. கலாசார்…. பாரம்பரா!

13. கலாசார்…. பாரம்பரா!
புதுசா ஒரு நிறுவனத்தில வேலைக்கு சேருகிறோம். அங்கே இருக்கற நிலவரம் தெரியாது. சிலரோட சேர்ந்து வேலை செய்ய வேண்டி இருக்கும். அப்படி செய்ய அவங்களை கொஞ்சம் புரிஞ்சுக்க வேண்டியது அவசியம். ஏன்னா ஒவ்வொருத்தரோட நடத்தையும் அவங்கவங்க கலாசாரத்துக்கு ஏற்ப மாறுபடுது. சில கலாசாரத்திலே ரொம்பவே இன்பார்மலா ‘டேய் வாடா போடா’ ரீதியில் பேசலாம். சில கலாசாரத்திலே இப்படிப்பட்ட நடத்தை பெரும் அதிர்ச்சியா இருக்கும். அங்கே ‘சார்’ சேர்த்து அழைக்கறதுதான் சரியா இருக்கும். ஒருமை கூடாது.

என்ன செய்யறது?
கொஞ்ச நாளுக்கு நிலமை கொஞ்சமாவது பிடிபடும் வரைக்கும் அடக்கி வாசிக்கணும். வாயை முடிஞ்ச வரை மூடி வெச்சுக்கொண்டு காதையும் கண்ணையும் நிறைய பயன்படுத்தணும். நாம எதை விரும்பறோமோ அப்படி நடந்துக்கறது சரியில்லை. மத்தவங்க அவங்களோட நாம் எப்படி நடந்துக்கணும்ன்னு விரும்பறாங்களோ அதுவே சரி. என்னை பேர் சொல்லியே கூப்பிடலாம்; சார் ந்னு சொல்ல வேண்டியதில்லைன்னு அவங்ககிட்ட நாம சொல்லலாம்; ஆனா அவங்களும் அதே மாதிரி சொன்னால் ஒழிய நாம் அப்படி செய்யக்கூடாது.

இந்த கலாசாரம் நாட்டுக்கு நாடு வித்தியாசப்படுறது மட்டுமில்லே. நம்ம நாட்டிலே மாகாணத்துக்கு மாகாணம்; ஏரியாவுக்கு ஏரியா, ஜாதிக்கு ஜாதின்னு கூட வேறுபடும். இப்ப லேடஸ்டா தலைமுறைக்கு தலைமுறை கூட!

இதெல்லாம் போறாதுன்னு நிறுவனத்துக்கு நிறுவனம் கூட மாறுபடும். அது நிறுவனம் தர்மத்தை மதிக்குதா இல்லை ப்ராக்டிகலா இருக்கா, இல்லை தானே ஒரு தொழில் தர்மத்தை உருவாக்கி இருக்கா என்கிறதையும் பொருத்தது,

கடைக்குப்போனா பொருளோட விலைக்கு பேரம் பேசலாமா? இல்லை அப்படி பேசினா நம்மை பிச்சைக்காரனை பார்க்கிற மாதிரி பார்ப்பானா? மாறுபடும்.
ஒரு உதவி வேணும்ன்னு கேட்கிறோம். செய்யறேன்னு ஒத்தர் சொல்லறார். செய்வாரா மாட்டாரா? இல்லை செய்யறதுக்கு ஏதும் கைமாறு எதிர்பார்க்கிறாரா? மாறுபடும்.
ஒரு வேலைக்கு கூடவே இருந்து கவனிக்கிறோம். வேலை செய்யறவர் இதை உதவியா பார்ப்பாரா அல்லது நம்ம மேல நம்பிக்கை இல்லைன்னு நினைப்பாரா? மாறுபடும்.


மொத்தத்தில நிலமையை புரிஞ்சுக்க வரை வாயை மூடுங்க! கவனியுங்க!

No comments:

Post a Comment