Friday 6 January 2017

8. நிகழ்காலத்தில வாழ்வோம்!

8. நிகழ்காலத்தில வாழ்வோம்!
அட, நிகழ்காலத்தில வாழாம எதிர்காலத்திலயா வாழறோம்? இல்லை இறந்த காலத்திலயா? ந்னு குறுக்குக்கேள்வி கேட்கலாம். ஆனா உண்மை அதுதான். பெரும்பாலும் கடந்த காலத்தில இப்படி நடந்துதே அப்படி நடந்துதேன்னு அசை போட்டு கோபம் தாபங்கள் எல்லாம் அனுபவிக்கிறோம். இல்லாட்டா எதிர் காலத்தில என்னாகும்ன்னு பயந்து சாகறோம்!அதுக்குன்னு கடந்த காலத்தைப்பத்தி நினைக்கவே கூடாதுன்னு இல்லை; அதுலேந்து பாடம் கத்துக்கணும். எதிர்காலத்தைப்பத்தி நினைக்கவே கூடாதுன்னு ஒண்ணுமில்லை. கொஞ்சமாவது திட்டம் போடணும். இது ரெண்டுமே மதிப்புள்ள பயிற்சிகள். ஆனா நாள் முழுக்க இதையே நினைக்கறது நிகழ்காலத்தில இருக்கறதை தடுக்கும். சுத்தி முத்தி என்ன நடக்கறதுன்னு கூட பார்க்க விடாது. சமூக விழிப்புணர்வுக்கு இப்படி நிகழ்காலத்தில இருக்கறது அவசியம்.

ஜென் துறவி ஒத்தரை ஒத்தர் கேட்டார். ஜென் ந்னா என்ன?
அவர் பதில் கொடுத்தார்: உண்ணும் போது உண்ணுவது; உறங்கும்போது உறங்குவது. இதுதான் ஜென்.

படிக்க முட்டாத்தனமா தோணினாலும் பெரும்பாலும் நாம் அப்படி செய்யலியே?

எப்படி இதை செய்யறது. நாம் செய்யறதை கவனிச்சு செய்யணும். ஆட்டோமேடிக்கா எதையாவது செய்யறதுல பிரச்சினையே மனசு வேற எங்கேயோ போயிடும். அது இறந்த காலமோ எதிர்காலமோ. எப்ப அடடா, நாம் நிகழ்காலத்தில இல்லையேன்னு கவனத்துக்கு வரதோ அப்ப உடனடியா செய்கிற காரியத்தில கவனத்தை வைக்கணும். அவ்வளவே.

No comments:

Post a Comment