Tuesday 3 January 2017

5. மல்டி டாஸ்கிங்?

 பல காலமா நம்ம புத்தில அடிச்சு இறக்கியிருக்கறது என்னன்னா, வெற்றி அடைய இன்னும் இன்னும் அதிக வேலைகளை வெச்சுகிட்டு எல்லாத்தையுமே ஒரே நேரத்தில கையாளணும். மல்டி டாஸ்கிங். அதிக வேலை அதிக திறமை, ரைட்?

தப்பு.
அப்படி பல வேலைகளை உயர் திறனோட செய்ய முடியாது. தரம் குறைந்து போகும். தரத்தை பத்தி கவலைப்படாத பல விஷயங்களை பேசிகிட்டே நடக்கறது - மாதிரி சில விஷயங்களை செய்யலாம். ஆனா தரம் தேவையானவற்றை அப்படி செய்ய முடியாது.
மீட்டிங் போட்டு ஏதோ சமாசாரம் விவாதிக்கப்படுது. இப்படி செய்யலாமா, அப்படி செய்யலாமா. இதோட சாதக பாதகங்கள் என்ன? அதோடது என்ன? நாமளும் அங்க இருக்கோம். அட சீரியஸ் சமாசாரமா இருக்கேன்னு நோட்ஸ் எடுத்துகிட்டு இருக்கோம். விவாதத்தில ஒரு சிலர் சீரியஸா அடிக்கடி பேசறாங்க.

திடீர்ன்னு பாத்தா ஒத்தர் குரல் கோபத்தோட ஒலிக்குது! ஓரிரு நிமிஷத்தில அடிதடி இல்லாத குறைதான்! அப்படி ஒரு சண்டை. நோட்ஸ் எடுக்கற நமக்கோ ஒண்ணுமே புரியலை. எல்லாம் நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்தது? இப்ப என்ன திடீர்ன்னு சண்டை? நோட்ஸை பாத்தா அங்கே ஒரு க்ளுவும் இல்லே! என்ன ஆச்சு? நாம சில முக்கிய தகவல்களை கவனிக்காம விட்டுட்டோம். நாம குறிப்பெடுக்கற பேப்பரையே கவனிச்சுகிட்டு இருந்தோம். அதனால மத்தவங்க என்ன நினைக்கிறாங்க, எப்படி உணர்கிறாங்க என்பதை பார்க்கத்தவறிட்டோம்.

இந்த மாதிரி மீட்டிங்க்ல நோட்ஸ் எடுக்கறதை விட மத்தவங்களை கவனிக்கறது நல்லது.

மீட்டிங் என்கிறது ஒரு அருமையான வாய்ப்பு. பலரும் இருப்பாங்க. அவங்களை கவனிச்சு அவங்க பேசப்படற விஷயத்துக்கு எப்படி ரிஆக்ட் செய்யறாங்க, முக பாவம் என்னனு கவனிக்கறது அவங்க புரிஞ்சுக்க உதவலாம். முடிஞ்ச வரை பேசறவரோட கண்களை பார்த்து தொடர்பு கொள்ளுங்க. மத்தவங்களையும் பாருங்க. அவசியம் நோட்ஸ் எடுக்க வேண்டிய சூழல் இருந்தா அடிக்கடி தலையை நிமிர்த்தி கவனியுங்க. கவனிப்பு தர தகவல்களை நோட்ஸ் தராது!

No comments:

Post a Comment