Monday 2 January 2017

4. ’ஜோக்கர் லைன்’

4. எல்லாருக்குமே அற்புதமாக பேச்சுத்திறன் கிடையாது. யாரையோ புதுசா பார்க்கிறோம். ரெண்டு வார்த்தை பேசறோம். அப்புறம்? அப்புறம் விழுப்புரம்!

அந்த ஆசாமி வளவளன்னு பேசறவரா இருந்துட்டா பரவாயில்லை. அவரும் நம்மள மாதிரி இருந்துட்டா? திரு திருன்னு முழுச்சிண்டு நிப்போம். விழுப்புரம் வந்துடும்.
இதுக்கு தயாரா ஒரு ’ஜோக்கர் லைன்’ கையில எப்பவும் இருக்கணும். அடுத்து என்ன பேசறதுன்னு முழிக்கிறப்ப அத எப்ப வேணுமானாலும் எங்கே வேணுமானாலும்பொருத்திக்கலாம். இது நமக்கு கொஞ்ச நேரத்தை சம்பாதிச்சு கொடுக்கும். கூடவே அவரோட ஐடியாக்களை, உணர்வுகளை நாம பேச கேட்க புரிஞ்சுக்க தயாரா இருக்கோம்னு சொல்லும்.

அதென்ன கேள்வி?
அதை நாமே தயார் பண்ணிக்கலாம். எதா வேணுமானாலும் இருக்கலாம். உதாரணமா ’சரி இந்த ரூபா நோட்டு செல்லாதுன்னு அறிவிச்சதை எப்படி பார்க்கறீங்க? ’
இது பத்தி தேவையானால் அடுத்த நாலு நாள் பேசலாம்.

இந்த கேள்வி நாட்டு நடப்பு, வேலை பத்தி இருந்தா நல்லது. மதம், ஜாதி, அரசியல் போல சென்சிடிவ் சமாசாரமா இருக்க வேணாம். அது விவாதத்துல கொண்டு போய் விட்டுடலாம். அடுத்தவரை நண்பராக்கிக்கொள்கிற நோக்கத்தை அது சிதறடிச்சுடும்.
கொஞ்சம் திறமை வளந்தாச்சுனா இதை எப்படி எங்கே கொண்டு வரணும்ன்னும் தெரிஞ்சுடும். இது திடுக்குன்னு பேச்சை மாத்தறா மாதிரி இருந்தாலும் பரவாயில்லை. ஒண்ணுமே பேசாம திரு திருன்னு முழிக்கறதை விட இது பரவாயில்லை!


நீங்க ஒரு வேளை இதை முயற்சி செஞ்சீங்க; அவரோ ஒரு அபிப்ராயமும் கிடையாதுன்னு சொல்லிடறார். இப்ப நமக்கு தேர்வு சிலது மட்டுமே இருக்கு. நம்ம அபிப்ராயத்தை சொல்லி பேச்சை நீட்டிக்கிறோம். இல்லை இன்னொரு ஆசாமியை பேசுல இழுக்கறோம். இல்லை இன்னொரு ஜோக்கரை வெளியே விடறோம். அப்பவும் முடியலையா? ரைட்டு! கொஞ்சம் வேலை இருக்கு; நா வரட்டுமா ரீதியில ஏதாவது சொல்லி கிளம்பவேண்டியதுதான்!

No comments:

Post a Comment