Wednesday 11 January 2017

9. வாழ்க்கை என்பது....

9. வாழ்க்கை என்பது பயணம் பத்தினது; இலக்கை பத்தினது இல்லைன்னு ஒரு சொலவடை கேள்விப்பட்டு இருக்கீங்களா? இல்லையா? சரி சரி, ரால்ஃப் எமெர்சன் ந்னு ஒரு ஆங்கில அறிஞர் அப்படிச்சொல்லி இருக்கார். “Life is a journey, not a destination.”

நா ரிஷிகேஷ் போறேன்னு சொல்லிட்டு ப்ளேன்/ ட்ரெய்ன்/கார் பிடிச்சு தூங்கிண்டே போய் அங்கே மண்ணை மிதிச்சுட்டு தூங்கிண்டே திரும்பிட்டா அது ரிஷிகேஷ் போனதா ஆகுமா? போற வழிகளில இருக்கறதை கவனிக்கணும். இயற்கை வளங்கள், மக்கள், அவங்களோட நடை உடை பாவனைகள், ஆன்மீக சூழல்…. இதை எல்லாம் கவனிக்காம இருக்கறதுக்கு பேசாம வீட்டிலேயே இருந்திருக்கலாமே?

இதே போலத்தான் நம் வாழ்க்கை சூழலிலும். வேலை செய்யற இடத்திலேயும். அடுத்த பேஷண்ட் யாருப்பா? ரைட். அடுத்த கஸ்டமர் யாருப்பா? ரைட். வேலையிலேயே குறியா இருப்போம். அவங்களைபத்தி வேற எதுவும் கவனிச்சோமா?


ஆஃபீஸ்ல நிர்வாகியா இருக்கீங்களா? திடீர்ன்னு ஒரு 15 நிமிஷ ப்ரேக் எடுத்துக்குங்க. ஆஃபீஸை ஒரு சுத்து சுத்தி வாங்க. யாரு என்ன செய்யறாங்க, என்ன பேசறாங்க? இது வரைக்கும் தெரியாத பல விஷயங்களும் தெரிய வரலாம். அடுத்த முறை வேற நேரத்தில போங்க. வாரம் இரண்டு முறையாவது இப்படி குறிப்பிட்ட நேரமா இல்லாம சுத்துங்க. இவன் வேலையை விட்டு போகப்போறான். இவன் வேலையே செய்யாம அரட்டை அடிச்சுகிட்டே இருக்கான். இவன் வம்பு தும்பு இல்லாம வேலை மட்டுமே செய்யறான்… இப்படி பல முக்கியமான தகவல்கள் கிடைக்கலாம். ஆஃபீஸ்ல பொதுவா மூட் எப்படி இருக்கு? குறை நிறைகள் என்ன? இவையும் தெரிய வரலாம். இப்படி முடிவுகளுக்குக்கூட அவசரப்பட்டு வர வேணாம். கண்களையும் காதையும் திறந்து வெச்சுகிட்டு கவனியுங்க; அது போதும்!

No comments:

Post a Comment