Wednesday 18 January 2017

15. அவர்கள் இடத்தில நாம்!

15. அவர்கள் இடத்தில நாம….
சினிமா நடிகர்கள் இதை காசுக்காக எப்பவுமே செய்யறாங்க. வில்லனா இருக்கணுமா? ரைட்டு. தமாஷா பேசி சிரிப்பூட்டணுமா? ரைட்டு. நல்ல நடிகர் எப்பவும் கொடுக்கப்பட்ட பாத்திரமாகவே ஆயிடுவார். அவருக்கான உணர்ச்சிகளை அனுபவிச்சு வெளிப்படுத்தி… ஒரே படத்தில ஒண்ணுக்கு மேல்பட்ட வித்தியாசமான பாத்திரங்கள் ஏத்து நடக்கிறதும் உண்டு. ஒரு பக்கம் சாதுவா பயந்த சுபாவத்தோடயும் இன்னொரு பக்கம் ரௌடி மாதிரியும் நடிப்பாங்க. ரெண்டுமே நம்பறா மாதிரியே இருக்கும்! நடிச்சு முடிச்ச பாத்திரத்தைப்பத்தி அவரை கேளுங்க. அவரை இன்னும் கொஞ்சம் புரிஞ்சுக்க முடிஞ்சது என்பாங்க. உதாரணமா பாரதியாரா நடிச்சிருந்தா பாரதியாரை இன்னும் கொஞ்சம் புரியும்.

இது நடிகர்களுக்கு மட்டுமில்லே. நமக்கும் சரி வரும். இன்னொருத்தரை அனாவசியமா விமர்சனம் செய்யறதை விட்டுட்டு அவரோட இடத்தில நாம இருந்தா எப்படி இருக்கும்ன்னு கற்பனை செஞ்சாக்கூட போதும். கொஞ்சமாவது அவங்க மேல இரக்கம் வந்துடும்.

ஒரு மீட்டிங் நடக்குது. தன் பங்கை சரியா செய்யாத ஒரு நபரை போட்டு தாக்கு தாக்குன்னு தாக்கறோம். அவங்க அழுதுகொண்டே வெளியே போயிடறாங்க. இதென்னடா இதுக்கு இப்படி அழறான்னு யோசிக்கிறோம். கூட இருக்கற ஒத்தர் “என்னடா நீ பாட்டுக்கு இப்படி திட்டிட்டே? அவங்க சாதாரணமா நல்லா வேலை செய்யறவங்கதானே? நம்ம பாஸ் அவங்களுக்கு கூடுதலா வேலை கொடுத்து உசிர எடுக்கறார்; தெரியாதா?” என்கிறார். “அடடா! தெரியாம போச்சே!” என்கிறோம்.

இந்த ‘தெரியாம போச்சே!’ ந்னு சொன்னாலே காலம் கடந்தாச்சுன்னு அர்த்தம்! அட, சாதாரணமா நல்லா வேலை செய்யறவங்க சரியா செய்யலைன்னா ஏன்னு கொஞ்சம் யோசிச்சு இருக்கலாமில்ல? வேலை நடக்கலைன்னு தெரிஞ்ச உடனே போட்டுத்தாக்காம வேற விதமா கேள்வி கேட்டு இருந்தா ஏன் செய்ய முடியலைன்னு சரியான விளக்கம் வந்து இருக்குமே? நாமும் அதை அனுசரிச்சு போயிருக்கலாமே? நாம அவங்க இடத்தில இருந்தா என்ன செஞ்சிருப்போம்? ஏற்கெனெவே ஒத்துக்கொண்ட வேலையை விட முடியாது. பாஸ்கிட்ட கூடுதல் வேலையை செய்ய முடியாதுன்னு சொல்ல முடியாது. அவர் வேலை பளுன்னு ஒரு காரணத்தை ஒத்துக்கற மனுஷர் இல்லை. பாஸ் வேலைக்கு முக்கியத்துவம் அதிகம். அதுக்கு அப்புறம்தான் வழக்கமான வேலை. இதை முடிஞ்ச வரை செய்வோம். ஆக நாமும் இதையேத்தான் செஞ்சு இருப்போமோ? அஹா!

சமூக விழிப்புணர்வை பொருத்த வரை நான் இப்படி வித்தியாசமா செஞ்சிருப்பேன் என்கிறது விஷயம் இல்லை. அது வேற கோணம். அதை இங்கே பார்க்கலை. நீங்க வேற; அவர் வேற. கொடுத்த சூழல்ல அவர் எப்படி செய்வார்ன்னு ஊகிக்கிறதுதான் விஷயம்.
ராமன் ஒரு ப்ராஜக்ட் செய்யறார். அதுல சில பிரச்சினைகள். அதைப்பத்தி மீட்டிங் போட்டு கேள்வியா கேக்கறாங்க. அவர் எப்படி பதில் சொல்லுவார்?

அவர் இடத்தில நீங்க இருந்தா வேற விதமா சொல்லுவீங்களா இருக்கும். ஏன்னா உங்க செயல்கள் ராஜஸமானவை. நீங்க செஞ்சது ஏன் சரின்னு விவாதம் செய்வீங்க. ஆனா இப்ப அது விஷயமில்லை. ராமன் எப்படி இதை கையாளுவார்ன்னு ஊகிக்கணும். அதுக்கு ராமனைப்பத்தி தெரிஞ்சு இருக்கணும். அவர் முன்னே மீட்டிங்ல எப்படி பேசினார்; எப்படி விஷயங்களை கையாண்டார்?அவரோட எண்ணப்போக்கு எப்படி? அவரோட உணர்ச்சிகள், நம்பிக்கைகள் என்னென்ன? அவரோட இயல்பு என்ன? அவர் ஒண்டிக்கு ஒண்டி பேசறப்ப பேசற விதமென்ன? மீட்டிங்க்ல பேசற விதம் என்ன? பலர் தன்னை விமர்சனம் செய்யும் போது அதை எப்படி எடுத்துப்பார்? இதெல்லாம் மிக முக்கியமான தகவல்கள்!

மீட்டிங் நடக்கறப்பவே நீங்க இப்படி பதில் சொல்லுவார்ன்னு ஊகிச்சு சரி பார்த்துக்கலாம்.
ராமனோட நீங்க சகஜமா பேசற நிலையில் இருந்தா கேட்கப்படாத கேள்விகளையும் அவரை தனியா சந்திச்சு சரி பாத்துக்கலாம். இப்படி கிடைக்கற அனுபவம் நம்மை மத்தவங்க இடத்தில வெச்சுப்பாத்து தகுந்தபடி சரியான நடவடிக்கையை எடுக்க உதவும்.

உதாரணமா ஒத்தருக்கு ஒரு வேலையை தரப்போறோம்ன்னா அவர் எப்படி இதை கையாளுவார்ன்னு சரியா ஊகிக்கிறது நல்லதுதானே?

No comments:

Post a Comment