Saturday 14 January 2017

12. மக்களை பராக்கு பாருங்க!

12. மக்களை பராக்கு பாருங்க!
சில சமயம் நமக்குத்தோணுமில்லையா? அப்ப்டீஈ சாய்வு நாற்காலில சாஞ்சுகொண்டு உலகத்தை வேடிக்கை பார்க்கலாம்ன்னு? ரைட்! அதேதான். இங்கே கொஞ்சம் பார்வையை குறுக்கிக்கொண்டு மனிதர்களை பாருங்க. வீதியை பார்க்கிற பால்கனி கிடைச்சா நல்லது! இல்லை ஏழைக்கு ஏத்த எள்ளுருண்டை கணக்கா லோக்கல் டீக்கடையே போதும்!

கவனிக்க ஆரம்பிக்கலாம். போகிற வருகிற மக்களோட மூட் எப்படி இருக்கு? அவங்க மத்தவங்களோட பழகறது எப்படி இருக்கு? மத்தவங்களோட பேசறாங்களா இல்லை செல்ஃபோன நோண்டிகிட்டு இருக்காங்களா? கடைன்னா என்ன வாங்கறாங்க? அவசரமாவா, இல்லை நிதானமா பாத்து பாத்து வாங்கறாங்களா?

பாதுகாப்பா தூரத்தில இருந்து கொண்டு உடல் மொழி, சொல்லில்லா குறிப்புகள் எல்லாத்தையும் பழக இது ஒரு சிறந்த களம்!


விலகி இருந்து பார்க்கிறதால நம்முடைய உணர்ச்சி அதுல கணக்கில வராது. யார் என்ன உணருகிறாங்க, என்ன செய்யப்போறாங்க, என்னென்ன சிக்னல்கள் பிறக்குது அவை எப்படி பெறப்படுதுன்னு பெரிய ஆராய்ச்சியே கூட நடத்தலாம். வழக்கமா இதெல்லாம் நம்ம பார்வையிலேயே சிக்காது. கடைக்குப்போனோமா, டீ வாங்கி அவசர அவசரமா குடிச்சோமா அடுத்து வேலையை பார்க்கபோலாம் என்கிற ரீதியில்தான் நாம் சாதாரணமா இயங்கறோம். சமூகத்தை பார்க்க புரிஞ்சுக்க இது ஒரு நல்ல வழி!

No comments:

Post a Comment