Thursday 5 January 2017

7. கச்சடாவை நீக்குங்க!

7. கச்சடாவை நீக்குங்க!
சமூக விழிப்புணர்வோட இருக்கணும்ன்னா நாம சமூகத்தோட நிகழ்காலத்தில இருக்கணும். ஆனா பலருக்கு உடல் இருக்கிற இடம் ஒண்ணு, மனசால இருக்கிற இடம் ஒண்ணுன்னுதான் இருக்கு. இதுல அர்த்தமே இல்லே. உள்ளே இருக்கற கவனத்திருப்பல்களை நீக்கணும். அது ஒரு ஸ்டோர் ரூம் மாதிரி. நிறைய ‘பயனுள்ள’ விஷயங்களை அங்கெ கெடாசி இருப்போம். தேவையானதை எடுக்கத்தான் முடியாது! என்ன செய்யலாம். நிதாட்ச்யண்ணமா தேவையில்லாததை வெளியே விட்டு எறியணும். அலைபேசில கணினில கேஷ் க்ளீன் செய்யறா மாதிரி!

எதையெல்லாம் இப்படி வெளியே கெடாசலாம்?
முதலாவதா நாம் நமக்கு நாமே திட்டத்தில பேசிகிட்டே இருக்கோம். இதுக்குன்னு தனியா நேரம் ஒதுக்கி செய்யறது நல்லதுன்னாலும் சமூக உறவாடும் நேரத்தில இதை செய்யறது சரியில்லை. சாப்பிடறப்ப சாப்பிடணும். பேப்பர் படிக்கும் நேரத்தில படிக்கணும். சாப்டுண்டே பேப்பர் படிச்சுண்டு பேப்பர் படிச்சுண்டே சாப்டுண்டு….. ரெண்டும் ஒழுங்கா நடக்காது! உணர்ச்சிகளுக்கும் வயித்துக்கும் நெருங்கின தொடர்பு இருக்கு. வயத்தை கலக்கற ந்யூஸ் படிச்சுண்டு சாப்பிடறது எப்படி சரியாகும்ன்னு யோசிச்சு பாருங்க!
கொஞ்சம் திசை மாறிட்டோம், பரவாயில்லை. இதுவும் முக்கியமே.
நமக்கு நாமே பேசறப்ப வெளி உலகத்தை ட்யூன் அவ்ட் செஞ்சுடறோம். சமூகத்தை விலக்கிட்டா ஏது சமூக விழிப்புணர்வு? அதனால சமூகத்தில் இருக்கறப்ப சமூகத்தோடயே இருக்கணும்; கவனிக்கணும்.

இரண்டாவதா பெரும்பாலோருக்கு ஒரு பழக்கம் இருக்கு. ஒத்தரோட பேசறோம். அவர் பேச ஆரம்பிச்ச சில நொடிகளிலேயே அவர் இதான் பேசறார்ன்னு ஒரு முடிவுக்கு வந்து பதிலை தயார் செய்ய ஆரம்பிச்சுடுவோம். அவர் பேசற மீதி வாக்கியங்கள் எல்லாம் காத்துலேயே போக வேண்டியதுதான்; காது கொடுத்து கேட்க மாட்டோம்! சில சமயம் இடைமறிச்சு பதில் சொல்லவும் ஆரம்பிச்சுடுவோம். சில சமயம் காது கொடுத்து கேட்காம அவர் பேசறது முடியறதான்னு மட்டுமே கவனிப்போம்.
இது ரெண்டுத்தையும் அவசியம் நீக்கணும். செய்ய வேண்டியது என்னவோ ரொம்ப சிம்பிள்தான்!

மேலே சொன்ன மாதிரி இடை மறிச்சு பதில் சொல்லாதீங்க. அடுத்து பதிலை முன் கூட்டியே தயார் செய்யற மனசை கட்டுப்படுத்தணும். அதுக்கு அந்த நேரத்தில நம் மனசை பிடிக்கணும். ‘டேய், இப்ப நாம வெறுமே கேட்கணும். முழுக்க கேட்டுட்டு அப்பறமா பதிலை சொல்லு!’ ந்னு அதை கண்டிக்கணும். பேசறவருக்கு சங்கடமா இல்லாதபடிக்கு அவரை நோக்கி கொஞ்சம், கவனிங்க, கொஞ்சமே கொஞ்சம் சாயலாம். அவர் முகத்தையே பார்க்கணும். ரொம்ப சாய்ஞ்சா பலருக்கு ஒரு சங்கடம் தோணும்; அதை தவிர்க்கணும்.
பேசறவங்களை முகம் பார்த்து செவி கொடுத்து கேட்க்கிறப்ப அவரை இன்னும் நல்லா புரிஞ்சுக்கலாம். நாம ஒத்தர் பேசறத கேட்கிறது அவரை புரிஞ்சுக்க, நம்மோட பேச்சுத்திறமையை காட்ட இல்லேன்னு மனசில படணும். இதை பழக பழக எப்ப பாத்தாலும் நமக்கு நாமே பேசறதும் குறைஞ்சு போயிடும். சரியா கேட்கும் திறனும் அதிகமாகும்.


இது இப்ப புரிஞ்சாலே நாம முன்னேறுகிறோம்ன்னு அர்த்தம்! இது வரை தெரியாமலே இருந்தது இல்லையா?

No comments:

Post a Comment